Thursday, 30 June 2016

களவு... காவல்... காவேரி...


இரண்டரை வருடத்துக்கு முன்னாடி, எனக்கு திருமணம் ஆனா புதுசு, வீடுக்காரம்மா ஊர்ல படிச்சிட்டு இருந்ததுனால, நான் பெங்களூர்ல நண்பர்களோடயே தங்கிருந்தேன். அப்ப ஒரு நாள், அதிகாலை 7-30 மணி இருக்கும் என்னோட கைபேசி அலற ஆரம்பிச்சுது, வீடுகாரம்மாதான் கூப்பிடுராங்க போலன்னு எடுத்து பார்த்தேன். யாரோ தெரியாத எண்ல இருந்து அழைப்பு வந்தது, அரை துக்கத்துல எடுத்து யாருன்னு கேட்டேன். எதிர் முனைல ஒருத்தர் “ஏங்க உங்க பணப்பை (purse) எங்க விடுதி வாசல்ல கிடக்குதுங்க, அதுல உங்க எண் இருந்துச்சு அத வச்சு கூப்பிடோம், வந்து வாங்கிரிங்களா?”ன்னு கேட்டார்.