வணக்கம் நண்பர்களே பல நாள் கழிச்சு வந்திருக்கேன், அதுவும் சில முக்கியமான கேள்விகளோட வந்திருக்கேன்.
வழக்கமா நான் ஆங்கில புத்தாண்ட கொண்டாடுறது இல்ல, யாருக்கும் பெருசா
வாழ்த்து சொல்லுறதும் இல்ல. நம்மள பொறுத்த வரை அது ஒரு விடுமுறை நாள் அவ்வளவுதான்,
ஆனா இந்த வருட ஆங்கில புத்தாண்டுக்கு நிறைய சங்கதிகள் நடந்தது. அதுல மகிழ்ச்சியான
சங்கதி அண்ணைக்கு என்னோட மாமாவுக்கு பையன் பிறந்தான்.
நண்பர்கள்கிட்ட இந்த செய்திய பகிர்ந்துக்கும் போது, நம்ம “சின்ன முழி
சித்தன்” ஒரு பொன்மொழிய உதிர்த்தான், ‘புத்தாண்டு அண்ணைக்கு பொண்ணு பிறந்த இன்னும்
நல்ல இருக்கும் டா, பொண்ணு பிறந்தா லெட்சுமியே வீட்டுக்கு வந்த மாதிரி’ன்னு
சொன்னான்.
இத கேட்ட உடனே எனக்கு ஒன்னும் புரியல, என்னங்க பண்றது சின்ன வயசுல
இருந்தே நமக்கு அறிவு கொஞ்சம் மந்தம். அதனால சாதாரணமா புரிஞ்சிக்க கூடிய சங்கதிகள்
கூட, எழுவது கேள்வி கேட்ட பிறகு தான் புரிஞ்சிருக்கு. இப்பவும் அதே மாதிரிதான் மேற்கு
நாட்டு ஆங்கில புத்தாண்டுக்கும், வடநாட்டு லெட்சுமிகும் என்ன சம்மந்தமுன்னு ஒரே
குழப்பம்.