இரண்டரை வருடத்துக்கு முன்னாடி, எனக்கு திருமணம்
ஆனா புதுசு, வீடுக்காரம்மா ஊர்ல படிச்சிட்டு இருந்ததுனால, நான் பெங்களூர்ல நண்பர்களோடயே
தங்கிருந்தேன். அப்ப ஒரு நாள், அதிகாலை 7-30 மணி இருக்கும் என்னோட கைபேசி அலற
ஆரம்பிச்சுது, வீடுகாரம்மாதான் கூப்பிடுராங்க போலன்னு எடுத்து பார்த்தேன். யாரோ
தெரியாத எண்ல இருந்து அழைப்பு வந்தது, அரை துக்கத்துல எடுத்து யாருன்னு கேட்டேன்.
எதிர் முனைல ஒருத்தர் “ஏங்க உங்க பணப்பை (purse) எங்க விடுதி வாசல்ல கிடக்குதுங்க,
அதுல உங்க எண் இருந்துச்சு அத வச்சு கூப்பிடோம், வந்து வாங்கிரிங்களா?”ன்னு
கேட்டார்.
Thursday, 30 June 2016
Saturday, 28 May 2016
கலந்தாய்வும். . . கந்திதமும். . . (பாகம் 2)
ஒரு வழியா மதியம் ஒரு
மணி போல, நண்பன் வெற்றி செய்தியோட வெளியில வந்தான். முதல் வேலையா வீட்டுக்கு
தொலைபேசில கூப்பிட்டு சொன்னோம், அவனோட அம்மா என்னோட ராசி பத்தி உயர்வா சொன்னாங்க.
என்னோட நண்பன் நல்ல படிச்சு, நுழைவுத்தேர்வுல நல்ல மதிப்பெண் வாங்கி, எனக்கு
(என்னோட ராசிக்கு) நல்ல பேர் வாங்கி தந்தான். அங்கிருந்து மதிய சாப்பாடு சாப்பிட
கிளம்பினோம், பேசிக்கிட்டே திரு.வி.க பாலத்த தாண்டி வந்தோம். சரியான வெயில்,
சென்னை வெயில் பத்தி கேள்விபட்டிருக்கேன், ஆனால் அனுபவிக்கிறது அதுதான் முதல்
முறை, சட்டையெல்லாம் நினைஞ்சு போச்சு.
Saturday, 30 April 2016
கலந்தாய்வும். . . கந்திதமும். . .
மனசு
முழுக்க பரவசத்தோட பேருந்துல ஏறினேன். அது வரைக்கும் கும்பகோணத்துல, என்னோட தாத்தா
வீட்டுக்கு மட்டும்தான் நான் தனியா போயிருக்கேன். முதல் முறையா நானும் என்னோட
நண்பன் நீதியலங்கரமும் மட்டும் தனியா சென்னை கிளம்பினோம். இப்ப மாதிரி இல்ல, அப்ப
சென்னையில நண்பர்கள் யாருமே கிடையாது, அதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை மட்டும்தான்
சென்னை போயிருக்கேன், ஊரப்பத்தியும் ஏதும் தெரியாது. தெரிஞ்சது எல்லாம் கிண்டியில
இறங்கி, பசுமைவழிச்சாலை போகணுங்கிறது மட்டும்தான். அதனாலேயே ஒரு பரவசத்தோட
கிளம்புனேன், என்னதான் பரவசம் இருந்தாலும் உள்ளுர கொஞ்சம் பயம் இருந்தது.
Sunday, 13 March 2016
சொப்பன சுந்தரி
ஒரு
நல்ல நாளில், காலை 9:30 மணி போல நானும் என்னோட நண்பன் அரசகுமாரும், தள்ளாகுளம் தபால்
நிலையத்து வாசல்ல நின்னு, அந்த பக்கம் போற மிதிவண்டியெல்லாம் பாத்துட்டு
இருந்தோம், சரியா சொல்லப் போனா ஒரு மிதிவண்டிய தேடிக்கிட்டு இருந்தோம். எங்களோட
இலக்கு மிதிவண்டியில வர்ற காக்கி சேலை கட்டுன ஒரு பெண்மணிய கண்டுபிடிக்கிறது.
ஏன்னா?.
Monday, 25 January 2016
கொஞ்சம் பொறுங்களேன் பா!!!
நாட்டுல
என்னன்னமோ அதிசயங்கள் நடக்குது, அதுல ஒன்னா, இரண்டு வருடங்களுக்கு முன்னாடி எனக்கும்
திருமணம் நடந்தது. இந்த இரண்டு வருடத்துல என்னோட வருமானம் முன்ன பின்ன இருந்ததைத்
தவிர, வேற ஏதும் தொல்லைகள் இல்லாம, திருமண வாழ்க்கை சுமூகமா நல்லாவே போயிட்டு
இருந்தது.
Subscribe to:
Comments (Atom)