Sunday, 7 October 2018

ஒரு பயணம்… பல நினைவுகள்… (பாகம் 3)


 
திருமணம் முடிஞ்சு எல்லாரையும் வழியனுப்பீட்டு, நண்பர் ‘அஜீ’ கூட அவர் வீட்டுக்கு போயி, அவரோட குழந்தையப் பார்த்தேன். அப்பறம் அங்க இருந்து இன்னோரு நண்பர் வீடுன்னு சாயங்காலம் வரைக்கும் வரிசையா ஒவ்வொரு இடமா சுத்திக்கிட்டே இருந்தேன்.

Wednesday, 3 October 2018

ஒரு பயணம்… பல நினைவுகள்… (பாகம் 2)



எப்போ அசந்தேன்னு தெரியல, யாரோ மூஞ்சில தண்ணிய தெளிச்சு விட்ட மாதிரி இருந்துச்சு, என்னானு பார்த்தா, தர்மபுரி கிட்ட நல்ல மழை. முந்தின இருக்கையில இருந்த புண்ணியவதி சாளரத்த சரியா அவங்க இருக்கை நுனி வரைக்கும் மூடி வச்சிருந்தாங்க. அவங்களுக்கு கொஞ்சம் காத்தோட்டமும், எனக்கு மூஞ்சியில மழை சாரலும் வர்ரதுக்கு சரியா இருந்தது. அவங்கள எழுப்ப சங்டப்பட்டு, அவங்க பக்கத்துல தூங்கீட்டு இருந்தவர எழுப்பி (அவங்களுக்குள்ள என்ன உறவுன்னு தெரியல) சாளரத்த மூட சொன்னேன்.

Friday, 21 September 2018

ஒரு பயணம்… பல நினைவுகள்…

பயணம் மற்றும் புத்தகம், இந்த இரண்டும் ஒரு மனிதன நல்லா சிந்திக்க வைக்கும் அப்படிங்கிறது என்னுடைய அபிப்பிராயம். ஒரு மனிதன சிந்திக்க வைக்கிறதும், சிந்தனையை தூண்டிவிடுறதும் இப்பொ ரொம்பவே அரிதாயிடிச்சு. அத செய்ய வேண்டிய, பள்ளி, கல்லூரிகள் கூட அத செய்யிறது இல்லைங்கிறது வேதனையான சங்கதி. நல்ல புத்தகங்கள், (இங்க நல்ல புத்தகங்கள் அப்படிங்கிறது அவரவர் ரசனையை பொருத்தது) நம்ம சிந்தனையை சிறப்பா தூண்டிவிடும்.

Saturday, 25 August 2018

சுயவிமர்சனம்

சமீப காலமா ரொம்பவே தேங்கி போன உணர்வு. வாழ்க்கை ஒரே மாதிரியான வழக்கத்துலயே சுத்திகிட்டு இருக்கு. புதுசா எதையும் கத்துக்கல, கிறுக்குதனமா கூட எதுவும் செய்யல, எழுதியும் கூட நிறைய நாளாச்சு, நாளென்ன? வருட கணக்குள ஆயிடிச்சு.

எனக்கு நல்லா எழுத வரலைனாலும், ஏதொ கொஞ்சம் அரையும்குறையுமா என்னத்தையாவது எழுதீட்டு இருந்தேன், குறைஞ்சது என்னோட ‘எண்ணத்தை’யாவது எழுதீட்டு இருந்தேன். ஏன் இப்படி ஆயிட்டொம்ன்னு நல்லா யோசிச்சு பார்த்தப்பதான் தெளிவா புரிஞ்சுது.