Saturday, 25 August 2018

சுயவிமர்சனம்

சமீப காலமா ரொம்பவே தேங்கி போன உணர்வு. வாழ்க்கை ஒரே மாதிரியான வழக்கத்துலயே சுத்திகிட்டு இருக்கு. புதுசா எதையும் கத்துக்கல, கிறுக்குதனமா கூட எதுவும் செய்யல, எழுதியும் கூட நிறைய நாளாச்சு, நாளென்ன? வருட கணக்குள ஆயிடிச்சு.

எனக்கு நல்லா எழுத வரலைனாலும், ஏதொ கொஞ்சம் அரையும்குறையுமா என்னத்தையாவது எழுதீட்டு இருந்தேன், குறைஞ்சது என்னோட ‘எண்ணத்தை’யாவது எழுதீட்டு இருந்தேன். ஏன் இப்படி ஆயிட்டொம்ன்னு நல்லா யோசிச்சு பார்த்தப்பதான் தெளிவா புரிஞ்சுது.


படிக்கிறது இப்ப ரொம்பவே குறைஞ்சு போச்சு!. முன்னாடி நிறைய புத்தகங்கள் படிப்பேன், கணினிய நோண்டுனாலும் அதுலையும் சிறுகதைகள் கட்டுரைகள்ன்னு நிறைய படிச்சிட்டு இருப்பேன். ஆனா இப்ப கவன சிதறள்கள் அதிகமாயிடிச்சு. எந்நேரமும் கைபேசிய நோண்டிகிட்டே இருக்கேன், அதுலையும் நல்ல சங்கதிகள் பார்கிறது கம்மி, முக்கால்வாசி தெண்டம்தான்.



இத இப்படியே விடக்கூடாதுன்னு முடிவுபன்னி, வீராவேசமா ”இனிமேல், பழைய மாதிரி நிறைய படிக்கப்போறேன், எழுதப் போறேன், புதுசா எதாவது கத்துக்கப் போறேன்னு, நிறைய ’போறேன்’ ”, சொல்லி முடிச்சேன். எல்லாத்தையும் பொறுமையா கேட்டுட்டு இருந்த என் வீட்டுக்காரம்மா நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு,”இது எத்தனை நாள்ன்னு பார்போம்”ன்னு சொல்லிட்டு போயிட்டா.

இதுக்காகவாவது எதாவது எழுதியே ஆகனும்ன்னு ஆரம்பிச்சுட்டேன். எல்லாம் சரிதான் என்ன எழுதுறது, எதப் பத்தி எழுதுறது, இதுதான் மிக பெரிய தடை இத யோசனை பன்னியே நாள் போயிடும். யோசிக்கும் போது வரும் சிந்தனைகள், எழுதனும்ன்னு உட்காந்தா தூங்க போயிடுது. பொதுவா எனக்கு யார் தூக்கத்தையும் கெடுக்குறது சுத்தமா பிடிக்காது.

சரி நம்மள பத்தி நாமே ஒரு சுயவிமர்சனம் பன்னலாம்ன்னு யோசிச்சேன். அப்படியே பார்த்தாலும் நமக்கு சுயவிமர்சன கட்டுரை எழுத தெரியாதேன்னு ஒரு கேள்வி வந்து நிக்கிது. ”சுயவிமர்சன கட்டுரைய விடு, உனக்கு முதல்ல கட்டுரைய ஒழுங்கா எழுத தெரியுமா?”ன்னு மனசாட்சி கேள்வி கேட்குது. அப்பொ இத்தனை நாள் என்ன தான் எழுத்தீட்டு இருந்தோம்?.


முதல்ல எப்படி எழுத ஆரம்பிச்சோம்ன்னு பொறுமையா யோசிச்சேன். கட்டுரைகள், கதைகள் படிக்கும் போது நாமும் எழுதுனா என்னன்னு தோனும், அது தான் முதல் தூண்டுதல். அப்பொ பார்த்து வலைப்பூ மற்றும் வலைப்பதிவுகள் பத்தி தெரியவும் முதல் வேலையா எழுத ஆரம்பிச்சுட்டேன்.

தவிர முக்கியமா ”நானும் எழுதுவேன் தெரியும்ல”ன்னு பெருமை பீத்திக்கத்தான் எழுத ஆரம்பிச்சேன். அதே மாதிரி, இதத்தான் எழுதனும்ன்னு எந்த வரையரையும் கிடையாது. நமக்கு வர்ரத எழுதனும், கூடியமட்டும் எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுதனும் அவ்வளவுதான்.

என்னோட எழுத்துக்கள நானே படிச்சு பார்க்கும் பொது, முக்கால்வாசி என்னோட வாழ்க்கை அனுபங்கள் மட்டும்தான் இருக்கு. பொதுவான சங்கதிகள் குறைச்சல்தான். உண்மைய சொன்னா அதுக்கு பயம்தான் காரணம். என்னை பத்தி எழுதும் போது ”என்ன ஆயிட போகுது”ன்னு தைரியம் வரும்.

அதுவே பொது சங்கதிகள பத்தி எழுதும் போது, நாம எதாவது தப்பான கருத்துக்கள சொல்லிடுவோமோ, கருத்து சரியாவே இருந்தாலும் அதையும் சரியான முறையில சொல்லனுமேன்னு பயம். அதவிட முக்கியமா சோம்பேறித்தனம்.

’சோம்பேறித்தனம்தான் என்னோட முதல் மற்றும் முக்கியமான எதிரி, பயம் அவனோட நெருங்கிய நண்பன்’. இவங்க இரண்டு பேரும் கூட்டனி வச்சா 90% வெற்றி வாய்ப்பு அவங்களுக்குதான்.  அப்படியும் என்னை ரொம்ப பாதிச்ச சில பொது சங்கதிகள், என் எழுத்தோட சண்டை போடாம, என் எதிரிகளோட சண்டை போட்டு வெற்றி அடைஞ்சி அப்பப்பொ வெளிய வந்திருக்கு. சொன்ன பொது சங்கதிகள கூட இன்னும் ஆழமா சொல்லலையோன்னு தோனுது.

இன்னும் எனக்குன்னு நல்ல எழுத்துநடை அமையலைங்றது மிக பெரிய பின்னடைவு. (எப்படி அமையும், தொடர்ந்து எழுதுனாதான?). வட்டார வழக்கும், ஒரளவுக்கு சுத்த தமிழும் கலந்தடிச்சு வருது. தவிர எழுத்து பிழைகள் கொஞ்சம் இருக்கு, அத சரி பார்க்க ஆள் தேட வேண்டிய இருக்கு. நானா பார்க்கும் போது கவனகுறைவுல சரியா வரல.

இந்த சுயவிமர்சனம் (எனக்கு தெரிஞ்ச, என்னால முடிஞ்ச சுயவிமர்சனம்) எனக்கு நானே தார்க்குச்சி குத்திக்கிறதுதான், அடுத்து தொடர்ந்து எழுதுறதுக்கான ஒரு தூண்டுதல். எனக்கு எழுத்தாளர் ஆகனும்ன்னு ஆசை எல்லாம் இல்ல (சாமி மேல சத்தியமா!). ஆனா, எழுதுறதுனால நிறைய படிக்கிறேன், மொழிய கொஞ்சம் கொஞ்சமா நல்லா கத்துக்கிறேன், குறிப்பா என்னோட தேடல் பெருகுது, என்னைய உயிர்ப்போட இருக்க வைக்குது. அதனால ”சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்”ங்ற மாதிரி தொடர்ந்து எழுத எழுத என்கிட்ட இருந்தும் நல்ல எழுத்து வரனும், வரும்.!

4 comments:

  1. சூப்பர் அண்ணா.....

    ReplyDelete
  2. Sir, good to see that writing u about something again...

    ReplyDelete
  3. long long ago... so long ago...

    ReplyDelete