பயணம்
மற்றும் புத்தகம், இந்த இரண்டும் ஒரு மனிதன நல்லா சிந்திக்க வைக்கும் அப்படிங்கிறது
என்னுடைய அபிப்பிராயம். ஒரு மனிதன சிந்திக்க வைக்கிறதும், சிந்தனையை தூண்டிவிடுறதும்
இப்பொ ரொம்பவே அரிதாயிடிச்சு. அத செய்ய வேண்டிய, பள்ளி, கல்லூரிகள் கூட அத செய்யிறது
இல்லைங்கிறது வேதனையான சங்கதி. நல்ல புத்தகங்கள், (இங்க நல்ல புத்தகங்கள் அப்படிங்கிறது
அவரவர் ரசனையை பொருத்தது) நம்ம சிந்தனையை சிறப்பா தூண்டிவிடும்.
அதே
மாதிரி பயணங்கள் நாம சிந்திக்கிறதுக்கான அவகாசத்த கொடுக்கும், ‘நாம வண்டி ஓட்டாத பயணங்கள்,
நாம வண்டி ஓட்டும் போது யோசிச்சா கூண்டோட கைலசாம்தான்’. பேருந்துகள்லயோ, இல்ல தொடர்வண்டிகள்லயோ
போகும் பயணங்கள் நம்மல நல்லா யோசிக்க வைக்கும், குறிப்பா நாம தனியா போகும் போது (அதுவும்
கைப்பேசிய நோண்டாம இருந்தா). அந்த யோசனை அர்த்தமுல்லதா?, அர்த்தமில்லாததா?, பயனுல்லதா?,
தெண்டமானதா? அதெல்லாமே வேற சங்கதி, ஆனால் யோசிக்க நேரம் கொடுக்கும். அப்படி நிறைய நேரமுல்ல
ஒரு பயணம் சமீபத்துல அமைஞ்சது.
பெரிய
இடைவேலைக்கு அப்பறம், பெங்களுருக்கு கிளம்பினேன். அந்த ஊரை விட்டு மதுரைக்கு மொத்தமா
வந்து பத்து மாசம் ஆச்சு. நண்பர் ‘சுஜித்’க்கு திருமணம், காதல் திருமணம், சில வருடங்களா
போராடி பெத்தவங்க சம்மதத்தோட நடக்குது. எனக்கும் பெங்களுருக்கு போயி நண்பர்கள் எல்லாரையும்
பார்த்துட்டு வரனும்ன்னு நெடு நாள் ஆசை, அதுக்கு இது ஒரு நல்ல சந்தர்பம்.
ஆனா
இங்க எனக்கு ஒரு இரண்டும்கெட்டான் நிலமை. என்னோட தாத்தா படுத்த படுக்கையா இருந்தாரு,
சரியா சொல்லனும்ன்னா அவரோட மரணப்படுக்கையில இருந்தாரு. அவர விட்டுட்டு போக சுத்தமா
மனசு இல்ல. அதெ சமயம் அந்த திருமணத்துக்கு போகாம இருக்கவும் மனசு இல்ல.
நீண்ட
குழப்பத்துக்கும், பல பேரோட ஆலோசனைக்கும் அப்பறம் உள்ளதாகுதுன்னு போக முடிவு பன்னி
கிளம்பினேன். என்னோட வீட்டுக்காரம்மாவயும் கூட வரச்சொன்னேன், அவங்க வர மட்டேன்னு இருந்துடாங்க.
என்னை விடவும் என்னோட தாத்தா மேல அக்கரையும் பாசமும் அவங்களுக்கு அதிகம். அவரை முக்கால்வாசி
பார்த்துக்கிட்டதும் அவங்கதான், ஆனா எல்லாரும் “நீங்க ரெண்டு பேரும் நல்லா பார்த்துக்கிட்டீங்க”ன்னு
பூவோட சேர்த்து இந்த ‘நாரையும்’ புகழ்றாங்க.
கிளம்ப
முடிவு பன்னேனே தவிர, குழப்பம் முழுசா தீரல. கடைசி வரைக்கும் யோசிக்கிட்டே இருந்து,
வியாழக்கிழமை இரவு பயணத்துக்கு அன்னைக்கு மதியம் தான் பயணச்சீட்டு வாங்கி வச்சேன்.
அங்க தங்குறதுக்கான இடத்துக்கு பெருசா மெனக்கிட தேவையில்ல, நிறைய நண்பர்கள் வீடு இருக்கு.
குறிப்பா நம்ம ‘வண்டன்’ நான் குடியிருந்த அதே வீட்டுல இருக்கான், அவன்கிட்ட நான் வர்ரத
சொல்லி வச்சேன்.
பேருந்துல
ஏறி காத்து வாங்கிக்கிட்டே யோசிச்சிட்டு போரேன், பேருந்துல ஏற்ர கடைசி நொடி வரைக்கும்
திரும்ப வீடுக்கே போயிடலாமான்னு இருந்துச்சு. வாழ்க்கைல முதல் முறையா தாத்தாகிட்ட சொல்லாம
கிளம்பியிருந்தேன். சொல்ல போன போது, எங்க “போகாத இரு”ன்னு சொல்லிடுவாருன்ற பயத்துல
சித்தப்பா சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டாரு.
அப்பறம்
சித்தப்பாவே என்னை கொண்டுவந்து மாட்டுத்தாவணில விட வந்தாரு. ஆனா வீட்டு முக்கு தாண்டுனதும்
வண்டில ஏதோ ஆகிபோயி நின்னுபோச்சு, எவ்வளவோ முயற்சி பன்னியும் எடுக்கல. நான் எப்பவும்
சகுனம் எல்லாம் பார்த்ததில்ல, ஆனா அன்னைக்கு ‘நாம கண்டிப்பா போகனுமா? ஏதோ தடுக்குற
மாதிரி இருக்கே’ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடேன்.
அப்பவும்
சித்தப்பாதான் தைரியம் சொல்லி, ஒரு தானில(auto rickshaw) அனுப்பி வச்சாரு. அந்த ஓட்டுனர
சும்மா சொல்லக்கூடாது கண்மூடித்தனமான வேகத்தோட இல்லாம, அதே சமயம் நல்ல வேகமாவும், என்னை
சரியான நேரத்துல மாட்டுத்தாவணிக்கு கொண்டு சேர்த்தாரு. நீண்ட யோசனைக்கு பிறகு உள்ளதாகுதுன்னு
பேருந்துல ஏறினேன்.
திண்டுக்கல்
தாண்டி குளிர் அதிகமாகி சாளரத்த மூடினேன். மறுபடி யோசனை பின்னோக்கி போகுது, இரண்டு
மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நடந்துட்டு இருந்த தாத்தா, கீழ விழுந்து படுத்த படுக்கை
ஆயிட்டார். கடந்த 8 மாசமா மூனு வேலையும் கஞ்சிதான், சமீபமா அதையும் சாப்பிட முடியல,
வயசு 92, செரிமானம் 98% நின்னுபோச்சு. சாப்பிடுராரோ இல்லையோ தினமும் காலையில குளிச்சிடனும்,
அதுக்குனே ஒரு தள்ளுவண்டி வாங்கி வச்சிருக்கோம். குளிச்சிட்டு, நெத்தியில பட்டைய போட்டுட்டு
திரும்ப படுதுக்குவார்.
எப்பவாவது
சாப்பிட கஞ்சி கேப்பார், அதையும் பல சமயங்கள்ல வாந்தி எடுத்துடுவார், வாழ்க்கையோட மிக
கடினமான பகுதிய கடந்துட்டு இருக்காருன்னு தோனும். ஆனா ஒரு விதத்துல அவர் ரொம்பவே குடுத்துவச்சவர்,
என்னோட சித்தப்பாக்கள், சித்திகள், அப்பா, அம்மா, என் வீட்டுக்காரம்மா, அவர பார்த்துக்க
அங்கயே தங்குன உதவியாளர் அக்கா, தினமும் வந்து குளிக்க வைக்கிற தம்பின்னு, எல்லாருமா
அவர் கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டோம். பேருந்துல, மனசுல ஓடிக்கிட்டு இருந்த ஒரே சங்கதி
தாத்தாவுக்கு எதும் ஆயிட கூடாது. இன்னும் கொஞ்சம் தெளிவா சொன்னா நாம ஊர்ல இல்லாத நேரம்
எதும் ஆயிட கூடாது.
தொடரும்


வேகமா மீதி கதய சொல்லுங்க.....
ReplyDeleteWaiting curiosly ....
எழுத்து நடை அருமை.
ReplyDeleteEppavum pola... Super...
ReplyDeleteNice anna, epo yarum book reading pantrathu ila anna it's True anna, but uga manusu irruthathu varuthu ....
ReplyDelete