Tuesday, 26 May 2020

கண்காட்சி பாகம் - 4


மதியத்துக்கு மேல ஆகியும் முதல்வர், அந்தா வர்றார், இந்தா வர்றார்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கொஞ்ச நேரத்துக்கு பொது மக்கள் யாருமே வரல, அப்போ முதல்வர் வந்துக்கிட்டு இருக்காருன்னு புரிஞ்சிது. ஒரு வழியா 2:45 போல, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் சூழ வந்து எல்லா காட்சியகங்களையும் பார்வையிட்டுட்டு கிளம்பினார்.

Monday, 18 May 2020

கண்காட்சி பாகம் - 3

மறுநாள் விடியகாலை கிளம்ப வேண்டிய இருந்தது, முதலமைச்சர் மட்டும் இல்லாம பல அமைச்சர்கள் வர்றதுனால, 9 மணிக்கு ஆரம்பிக்கிற கண்காட்சிக்கு, 7 மணிக்குள்ள அங்க இருக்கனும்னு சொல்லிட்டாங்க (பாதுகாப்பு முன்னேற்பாடுகள்). நாங்களும் சாப்பிடாம கூட கிளம்பினோம். கிளம்புமும் போது, வீட்டுகாரர் வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாரு.

 

அவர் கூட 20 நிமிடம் பேசிட்டு கிளம்பினோம், சரியா சொல்லனும்ன்னா அவர் பேசுறத கேட்டுட்டு இருந்தோம். நாங்க நேரமாகுதுன்னு கிளம்பும் போது, “நானும் கண்காட்சிக்கு வருவேன் தம்பி, முதலமைச்சர் நம்ம ஊருக்கு வந்திருக்காரு, நாம போயி ஒரு எட்டு பார்க்காம இருந்தா நல்லாவா இருக்கும்”ன்னாரு. நண்பன் படக்குன்னு “ஆமா ஆமா, இல்லைன்ன அவர் உங்கள தப்பா நினைச்சுக்க மாடாரா?”ன்னான். நல்ல வேலையா அவர் காதுல விழுகல, நான் சிரிப்ப அடக்கிக்கிட்டு வேகமா நடந்துட்டேன்.

 

Monday, 11 May 2020

கண்காட்சி பாகம் - 2


⥢ முந்தய பாகம்

மறுநாள் காலையில எந்திரிக்க 8 மணி ஆகிடிச்சு, வீட்டுல யாருமே இல்ல. அந்த இரண்டு பேரும் சீக்கிரமே கிளம்பி வேலைக்கு போயிட்டாங்க போல, நாங்க கிளம்பும் போது வீட்டு சாவிய கீழ் வீட்டுல குடுத்துட்டு போகச் சொன்னாங்க. நேத்து பிரச்சனை முடிஞ்சிது, இன்னைக்கு இரவு எங்க தங்குறதுன்னு யோசிச்சோம். நேத்தே நிறைய வேலைகள் முடிஞ்சதால இன்னைக்கு நிறைய நேரம் இருக்கும், எப்படியாவது அலைஞ்சு திறிஞ்சு ஒரு இடத்த புடிச்சிடனும்.

 

இத யோசிக்க ஆரம்பிச்சு முழுசா 5 நிமிடம் கூட இருக்காது, கைபேசியில ஒரு அழைப்பு வந்தது, “தம்பீ, அந்த பதாகைய எப்ப மாத்துவிங்க”ன்னு அந்த உதவி பொறியாளர் (உ.பொ) கூப்பிடாங்க. “அட இருங்கமா இன்னும் கடை கூட திறந்திருக்காது, அதுக்குள்ள நீங்க வேற”ன்னு. இரண்டு பேரும் கிளம்பி பக்கத்துல கடை தேட ஆரம்பிச்சு, ஒரு அச்சகத்த புடிச்சோம். கடை பூட்டி இருந்தாலும் கைபேசி எண் இருந்தது, அதுக்கு கூப்பிட்டு “கடை எப்பங்க தெறப்பிங்க”ன்னு நேரத்தையும் கேட்டு வச்சோம்.

Monday, 4 May 2020

கண்காட்சி (பாகம் - 1)


“மாமா, அடுத்த 5 நாள் நாம கள்ளக்குறிச்சிக்கு போறோம், நீ வந்தே ஆகனும்”, இப்படி திடீருன்னு திண்டுக்கல் சாரதி சொன்னான். உண்மைய சொல்லப்போனா, முதல்ல இத தட்டிக்கழிக்கனும்ன்னு தான் யோசிச்சேன். ஆனா சமீபத்துல வீட்டுல வாங்குன வசவுகள், கிண்டல்கள், மற்றும் நண்பனின் கோரிக்கை எல்லாம் சேர்ந்து என்னைய கிளம்ப வச்சுது.

பெங்களூருல வேலைய விட்டுட்டு வந்து இங்க பல மாதங்கள் நான் வேலையும் இல்லாம காசும் இல்லாம, சும்மாவே இருந்தேன் (இன்னமும் அப்படிதான் இருக்கேன்). நடுவுல கொஞ்ச காலம், நண்பன் தி.சாரதி கூட சூரிய மின்னாற்றல்(Solar Energy) வேலைகளுக்கு அப்பப்போ போய் அதப்பத்தி ஓரளவுக்கு தெரிஞ்சுக்கிட்டேன். அதுலையும் கடந்த ஒரு வருடமா எனக்கு வேலை இல்லாம இருந்தது.

“வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோ உயர்வான்”ங்கிற மாதிரி. வேலை இல்ல, அதனால கையில காசு இல்ல, அதனால என்னோட நிலைமை அதல பாதாளதுக்கு போக ஆரம்பிச்சு, அதனால என்னோட மானம் வானுயர காத்துல பறக்க ஆரம்பிச்சிது.