சங்கதம்
வலைப்பூவை படிக்க வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன், உங்கள் அனைவருக்கும்
முகரனின் அன்பு வணக்கங்கள். பொதுவா கடந்த சில நாட்களாகவே, ஏன் மாதங்கள்ன்னு கூட
சொல்லலாம், இல்ல ஆண்டுகள்ன்னே சொல்லுவோம், ஒரு வழியா ஒரு நூற்றாண்டு அப்படின்னே
சொல்லி முடிச்சிருவோம், தமிழக மக்கள் இந்த பிரச்சனைய சந்திச்சிட்டு இருக்காங்க. இது
முதல்ல நகரத்துல இருந்து துவங்கப்பட்ட ஒரு பிரச்சனைதான், ஆனால் நாளடைவுல இது பரவி
கிராமங்களையும் ஆக்கரமிச்சு, இப்ப இது இல்லாத இடமே இல்ல அப்படிங்கற நிலைமையில
இருக்கு. அந்த பிரச்சனை என்ன?, அதனுடைய தாக்கம் எப்படியெல்லாம் இருக்கு, அது
என்னன்ன விதமா மாற்றம் அடையிது, அத பத்திதான் இப்ப பேச போறோம்.
Monday, 12 August 2013
Monday, 29 April 2013
சென்னை பயணம் - 3
ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் வீட்டுல இருந்தணுக,
வந்ததுல இருந்து எங்கயும் வெளிய போகவே இல்லைன்னு, ஸ்பென்சர் பிளாசாக்கு போனோம்
(என்னோட விருப்பப்படி). நிறைய கடைகள் மூடப்பட்டு, கூட்டமே இல்லாம வெறிச்சோடிப்போய்
இருந்தது. இதே ஸ்பென்சர் முன்னாடி எப்படி இருந்தது, வார இறுதிகள்ல வகை கூட்டம்
இருக்கும். ஒரே ஒரு நல்ல சங்கதி, முன்ன மாதிரியே இப்பவும் மூனாவது மாடில உள்ள துணிகடைகள்ல
நூறு ரூபாய்களுக்கு கொசுவுசட்டைகள் கிடைக்குது. அது இன்னும் எத்தனை நாளைக்கோ
தெரியல.
Saturday, 13 April 2013
சென்னை பயணம் - 2
வீடு போய் சேர்ந்ததும் கொஞ்சம் இளைப்பாறுனேன்,
அப்பதான் திடிருனு நெனவு வந்து கைபேசி எடுத்து “பத்தரமா வந்துட்டேன்”னு சொல்ல
வேண்டிய இடங்கள்ல சொன்னேன். இல்லேன்னா, “ஏன்டா போய் இறங்குனா ஒரு வார்த்தை சொல்ல
மாட்டியா?”ன்னு, எனக்கு அழைப்பு வந்துரும். முன்னாடினா கூட அம்மா மட்டும்தான் இத
கேட்பாங்க, இப்ப இன்னொரு ஆள் வேற சேர்ந்தாச்சு.
நான் மதியம் போய் இறங்குனதுனால, வீட்டுல
‘வெள்ளையன’ தவிர ஒருத்தனும் இல்ல. அவனுமே மதியம் சாப்பாட்டுக்கு வந்திருந்தவன்,
நான் பொய் கொஞ்ச நேரத்துல வேலைக்கு கிளம்பிட்டான். அவன் போனதும் குட்டி தூக்கம்
போடலாம்னு தோனுச்சு. அப்பறம் என்ன
நெனச்சேனோ அந்த பகுதிய சுத்தி அப்படியே ஒரு நடை போயிட்டு வரலாம்னு, காதுல
கட்டுக்கம்பிய மாட்டி, பாட்டு கேட்டுகிட்டே நடக்க ஆரம்பிச்சேன்.
Tuesday, 12 February 2013
சென்னை பயணம் - 1
ஆங்கில புத்தாண்டுக்கும் நமக்கும் என்னைக்கும்
சம்பந்தம் இருந்ததே இல்ல. சின்ன வயசுல அத கொண்டாடுற மாதிரி ஏதும் சந்தர்ப்பம்
அமையல. வளர்ந்த பிறகு “அத ஏன் நாம கொண்டாடனும்?” அப்படின்ற கேள்வி மனசுக்குள்ள
வந்திருச்சு. என்னோட நண்பர்களும் ஏறக்குறைய என்னய மாதிரியேதான், இதெல்லாம் பெரிசா
கொண்டாட மாட்டாங்க. எங்களோட இந்த ஒற்றுமைய மித்தவங்க “ஒரே குட்டையில ஊறுண மட்டைகள்”ன்னு
சொல்லுவாங்க, ஆனா நாங்க இத “புத்திசாலிகள் எல்லாரும் ஒரே மாதிரி யோசிப்பாங்க”ன்னு
சொல்லுவோம்.
Subscribe to:
Comments (Atom)