ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் வீட்டுல இருந்தணுக,
வந்ததுல இருந்து எங்கயும் வெளிய போகவே இல்லைன்னு, ஸ்பென்சர் பிளாசாக்கு போனோம்
(என்னோட விருப்பப்படி). நிறைய கடைகள் மூடப்பட்டு, கூட்டமே இல்லாம வெறிச்சோடிப்போய்
இருந்தது. இதே ஸ்பென்சர் முன்னாடி எப்படி இருந்தது, வார இறுதிகள்ல வகை கூட்டம்
இருக்கும். ஒரே ஒரு நல்ல சங்கதி, முன்ன மாதிரியே இப்பவும் மூனாவது மாடில உள்ள துணிகடைகள்ல
நூறு ரூபாய்களுக்கு கொசுவுசட்டைகள் கிடைக்குது. அது இன்னும் எத்தனை நாளைக்கோ
தெரியல.
அங்க இருந்து எதாவது ஒரு கடற்கரைக்கு போகலாம்னு
யோசிச்சோம். என்னதான் சென்னைலையே ரெண்டு வருடங்கள் இருந்திருந்தாலும், மெரினா தவிர
வேற எங்கயும் போனதே இல்ல, போக சந்தர்ப்பமும் அமைஞ்சது இல்ல. அதனால திருவான்மியூர்
கடற்கரைக்கு போகாலம்ன்னு முடிவு பண்ணி நான், ‘வெள்ளையன்’, ‘தி.சாரதி’, ‘பாசக்காரன்’,
அப்பறம் ‘நாய்சேகர்’, எல்லாம் சேர்ந்து போய் அங்க செம ஆட்டம். அந்த கடற்கரை மெரினாவ
விட கொஞ்சம் கூட்டம் குறைவாவும், அப்பறம் அங்க மாதிரி கடைகள் இல்லாமலும் இருந்தது,
அதனால அங்க விட குப்பையும் கொஞ்சம் குறைவா இருந்தது, மித்தபடி எல்லாம் வழக்கம்
போலதான்.
சென்னைல எப்ப கடற்கரைக்கு போனாலும், காதலர்கள
பார்த்துதான் இன்னவரைகும் வியந்துட்டு இருக்கேன். அனல்வெயில், அடைமழை, புயல்,
சுறாவளி, ஏன் சுனாமியே வந்தாலும் அசையாம காதல் பண்றாங்க. உனக்கு ஏன்டா எரியுதுன்னு
கேட்காதிங்க? இந்த ஆர்வத்தையும், ஈடுபட்டையும் எல்ல தருணத்துலயும் காட்டுன எந்த
காதலையும், எவனளையும் பிரிக்க முடியாதுன்னு சொல்ல வந்தேன்.
சரியா புத்தாண்டுக்கு முதல் நாள் நானும்
நாய்சேகரும் ஊருசுத்தீட்டு இருந்தோம். சாயங்காலம் போல பிட்சா சாப்பிட்டோம் (அவன்
காசுலதான்). என்னை பொறுத்த வரைக்கும், அது சில பசங்க சொல்லற மாதிரி கொடூரமா இல்ல,
அதே சமயம் ரொம்பவும் நல்லா இல்ல. அங்க எங்களுக்கு முன்னாடி அரைக் கால்சட்டை போட்டு
சாப்ட்டுக்கிட்டு இருந்த ரெண்டு பொண்ணுங்க, என்னை அநியாயத்துக்கு ஆச்சிரிய படுத்தீட்டாங்க.
அவங்க அங்க இருந்த சுமார் இருபது நிமிடமும் ஒருநொடி கூட பேச்சை நிறுத்தல, அதே
சமயம் சாப்பிடுறதையும் நிறுத்தல. இந்த வித்தை எப்படி சாத்தியம்ன்னு இன்னவரைக்கும்
என்னால கண்டுபிடிக்கவே முடியல.
அன்னிக்கு இரவு போல ‘சிறுதீனி செங்குருவி’கிட்ட
இத பத்தி சொல்லீட்டு இருந்தேன். இதனை சங்கதிகள்லையும் அவளுக்கு அந்த பொண்ணுங்க
அரைக் கால்சட்டை போட்டிருந்தது மட்டும்தான் கேட்டிருக்கு. உடனே “என்னது ‘அரைக் கால்சட்டையா’?.
சென்னையே சரியல்லப்பா, பேசாம சீக்கிரம் பெங்களுருக்கு கிளம்புங்க” அப்படின்னா. அத
கேட்டுட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது, என்னமோ பெங்களுருல பொண்ணுங்க எல்லாம்
இழுத்து பொத்திட்டு இருக்க மாதிரி.
சரி நாம எதுக்கு அதெல்லாம் பேசிக்கிட்டு,
அப்பறம் இதெல்லாம் பெண் சுதந்திரம், நீ ஆண் ஆதிக்கத்திமிர் பிடிச்சவன், உன்னோட
கண்ணுலதான் பிரச்னை இருக்கு, அப்படின்னெல்லாம் சொல்லுவாங்க. இவங்க சொல்றதுக்காக மருத்தவமனைல
போய் நம்ம கண்ண பரிசோதனையா பண்ண முடியும், அதனால இத விட்டுட்டு கதைய தொடர்வோம்.
மறுநாள் புத்தாண்டு வந்தது, நான் சொன்ன மாதிரி
பசங்க எவனும் இத பெருசா கொண்டாடல. அன்னிக்கு பகல்ல ‘சாரதி’ கூட மாம்பலம் போனேன்.
நான் முன்னாடி தங்கியிருந்த அறை, சுத்துன இடங்கள் எல்லாத்தையும் ஒன்னு விடாம நல்ல
சுத்துனேன். பாவம் ‘சாரதி’, கூட வந்த கொடுமைக்கு, அவனும் வேகாத வெயில்ல என்னோட
சுத்தீட்டு இருந்தான். இதன் மூலமா, ஊருக்கு கிளம்பும் போது செய்யணும்னு நினைச்ச
எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டேன்.
அன்னிக்கு இரவு ‘மஞ்சா மாமா’, வடபழனி முருகன் கோவிலுக்கு
போகலாம்னு சொன்னான். எனக்கு அதுல விருப்பம் இல்ல, ஆனா சூளைமேடுல இருந்து நடந்தே
போவோம்னு சொன்னதும் கிளம்பிட்டேன். நான், ‘மஞ்சா மாமா’, ‘தி.சாரதி’ மூனு பேரும்
பேசிகிட்டே பொறுமையா நடந்து போனோம். அங்க போனா எகுடுதிப்பான கூட்டம். இவ்வளவு
தூரம் வந்ததுக்கு உருப்படியா ஒரு வேலையாவது பார்க்கனும்ல, அதனால அப்படியே போய்
‘வடபழனி பாண்டியஸ்’ உணவகத்துல பிரியாணி சாப்டுட்டு வந்துட்டோம்.
ஊருக்கு கிளம்புற அன்னைக்கு, பசங்க ஒரு வங்காளி
கடைக்கு சாப்பிட கூடீட்டு போனாங்க. அங்க ரசகுல்லா ரொம்ப நல்லா இருந்தது, நம்ம
‘சாரதி’கிட்ட ரொம்ப நல்லா இருக்குடான்னு சொல்லீட்டு இருந்தேன். உடனே அவன் “மாமா இதுக்கே
இப்படி சொல்லற, கொல்கொட்டல இதைவிட செமையா இருக்கும். அங்க காலை சாப்பாடே இதுதான்”
அப்படினான். எப்படியாவது அங்க ஒரு தடவையாவது போயே ஆகனும்னு முடிவு பண்ணேன்.
திரும்ப ஊருக்கு புறப்படும் போது இரவு
கிளம்புனேன். ஆனா ஏன்டா? அப்படி கிளம்பினோம்ன்னு நொந்துக்கிட்டேன். தொடர்வண்டி
முழுக்க கரப்பான்பூச்சி அங்கயும் இங்கயும் ஓடிட்டு இருந்தது. நம்ம மாண்புமிகு
அரசாங்கம் ஒரு சில முக்கியமான வண்டிகள தவிர மித்த எதையும் கொஞ்சம் கூட பராமரிக்கிறதே
இல்ல. என்னதான் கரப்பான்பூச்சிய கட்டிபிடிச்சிகிட்டு தூங்க வேண்டிய நிலைமை வந்தாலும்,
அசதில நல்லா தூக்கம் வந்திருச்சு.
நண்பர்களோட அருமையான ஒரு வாரம், கடைசியா
முடிவுக்கு வந்தது. என்னை பொறுத்த வரை, நாமெல்லாம் குறைஞ்சது மூனு மாசத்துக்கு ஒரு
முறையாவது நல்ல ஒரு பயணம் போயிட்டு வரணும். பயணம் என்னைக்கும் நாமக்கு உற்ச்சாகத்தையும்,
புத்துணர்ச்சியையும் தரும். அதுவும் இப்ப இருக்க இறுக்கமான வாழ்கை சுழ்நிலையில,
நமக்கு அது ரொம்பவே அவசியம்ன்னு நினைக்கிறன்.

Good one :)
ReplyDelete