சமீபத்துல ஒரு புத்தகத்த பார்த்தேன் அதோட பேர் ‘திருமண கையேடு’, இது
என்னடா கண்றாவீன்னு திறந்து பார்த்தா, திருமணத்துக்கு அப்புறம் எப்படியெல்லாம்
நடந்துகனும்ன்னு விளக்கமா சொல்லுறாங்களாம். வர வர இந்த ‘சுய முன்னேற்ற
புத்தகங்கள்’ அப்படிங்கற பேர்ல சிலர் அடிக்கிற கூத்து தாங்க முடியல. ‘வெண்பொங்கலாக
இருங்கள்’, ‘தனது துண்டை விற்ற துறவி’ அப்படி இப்படின்னு ஏகப்பட்ட புத்தகங்கள்
வழியா, சாப்பாட்டுல இருந்து சங்கு ஊதுற சங்கதி வரைக்கும் ஆளாளுக்கு அறிவுரை
சொல்லுறாங்க. புத்தகங்கள்ன்னு இல்ல சில இணையதளங்கள்ல இருந்து வார இதழ்கள் வரைக்கும்
இதே அக்கப்போறுதான்.
Wednesday, 28 September 2011
Thursday, 1 September 2011
குல்லா போடுனும்(மா)
நான் வலைப்பூ துவங்குனதுல இருந்து இப்பதான் உருப்படியா ஒரு செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். தயவு செய்து இந்த பதிவ நிறைய பேரை படிக்க வைங்க, அல்லது இந்த செய்திய நீங்களா உங்களுக்கு தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லுங்க. நமக்கு தேவை இது எல்லார்கிட்டயும் போய் சேரனும்.
Friday, 26 August 2011
பயணங்கள்
நம்மோட வாழ்க்கை பயணம் ஒரு பக்கம் என்ன ஏதுன்னு தெரியாம போய்க்கிட்டு இருந்தாலும், வாழ்க்கைல நாம போற பயணங்கள் என்னைக்குமே சுவாரசியமானதுதான். ஒவ்வொரு முறையும் நமக்கு அது எதாவது ஒரு புது அனுபவத்த கண்டிப்பா கொடுக்கும். குறைந்தபட்சம் தான் போனதுல ஒரு பயணமாவது பிடிக்காத ஆட்கள் யாரையும் இதுவரைக்கும் நான் பார்த்ததில்ல. என்னதான் பயணங்கள் குறிப்பா சாலைவழி பயணம் சிலருக்கு சரிவராதுன்னாலும், அத மிகவும் விரும்புவாங்க. நம்ம ‘ம.மன்னன்’ முக்கால்வாசி பயணத்துல வாந்தி எடுத்துருவான், ஆனா அவன் அதுக்காக எங்கயும் வரமாட்டேன்னு சொன்னதே இல்ல.
Wednesday, 3 August 2011
கோமாளியின் கதை (காதல் - இறுதி பாகம்)
கடந்த மூன்று பதிவுகளா கூடிய மட்டும் யாரையேல்லாம் வம்புக்கு இழுக்கலாமோ அத்தனை பேரையும் இழுத்தாச்சு. இப்போ மட்டும் என்னோட கதைய எழுதல, பல பேர்க்கிட்ட நான் சாத்து வாங்கவேண்டியதுதான். ஆனா என்னோட காதல் கதை எப்படி துவங்கி எப்படி முடிஞ்சதுன்னு எனக்கே இன்னைய வரைக்கும் சரியா புரியல, இந்த லட்சணத்துல அத உங்களுக்கு எப்படி புரியவைக்க.
Saturday, 23 July 2011
கத சொல்ல போறேன் . . . (காதல் - 3)
பள்ளி படிக்கிற சமயத்துலயே ஊருபட்ட காதல் கதை, கல்லூரில கேக்கவாவேனும். என்ன அத்தனையும் சொல்லனும்ன்னு ஆரம்பிச்சா விடிஞ்சுரும். அதுவும் சரியா நான் கல்லூரிக்கு போற சமயத்துலதான் கைபேசி பிரபலம் அடைய துவங்குச்சு. வந்த புதுசுல எவனாவது ஒன்னு ரெண்டு பேர்தான் வச்சிருப்பான், அதுலயே எல்லாப் பயலும் பேசுவான். கைபேசி வர்றதுக்கு முன்னாடி, அதுவும் வேற வேற ஊர்கள்ல இருந்த காதலர்கள் என்ன செஞ்சாங்களோ தெரியல. ஆனா இப்பமட்டும் கைபேசிய வச்சுக்கிட்டு என்ன எதிர்கால வாழ்க்கையப்பத்தியா பேசுறாங்க, பேசுறது எல்லாம் ஒன்னே ஒன்னுதான்.
Thursday, 14 July 2011
-:வில்லன்:- (காதல் - 2)
நமக்கும் பொண்ணுங்களுக்கும் இன்னைக்கு நேத்தில்ல என்னைக்குமே பதினஞ்சுல பாதிதான். அதுக்கு முக்கியமான காரணம் என்னோட பேச்சுதான்னு நினைக்கிறேன், பசங்கக்கிட்ட பேசுற மாதிரியே அவுங்கக்கிட்டையும் பேசுனா பாவம் என்னதான் பண்ணுவாங்க (அதனாலயே பொண்ணுங்கக்கிட்ட பேசுறதையே சுத்தமா குறைச்சுகிட்டேன்). அதுலயும் 11ஆம் வகுப்பு போற சமயத்துல நமக்கு ஏகப்பட்ட திமிரு, பொண்ணுங்கள எந்நேரமும் திட்டிக்கிட்டே இருப்பேன் ஏன்னு இன்னவரைக்கும் தெரியல. இந்த மாதிரி ஒரு சமயத்துலதான் நம்ம 'சின்னமுழி சித்தன்'(அவன் தலையெழுத்து) வகையா வந்து கையில மாட்டுனான்.
Friday, 24 June 2011
காதல்
நம்ம குண்டல வண்டனுக்கு என்னாச்சு தெரியல நேத்து முழுக்க வழக்கத்துக்கு மாறா ஒரே மகிழ்ச்சியா இருந்தான். என்னடா இதுன்னு யோசிக்கும் போதுதான் எனக்கு காரணமும் புரிஞ்சு, ஒரு ஞாபகமும் வந்துச்சு, "அட இரண்டு வாரமா நம்ம ஒண்ணுமே எழுதலா!". இதுக்காகவது எழுதனும்ன்னு துவங்கிட்டேன், தலைப்பு என்னமோ முன்னையே முடிவானதுதான், சும்மாவா உலகளாவிய தலைப்பாச்சே. என்ன பல பசங்க பீதில சொல்லாமையே விடுருவானுங்க, சில பசங்க உள்ளதாகுதுன்னு சொல்லிருவானுங்க, ஆனா இத கடக்காம எனக்கு தெரிஞ்சு ஒரு பய வந்தது இல்ல. இதுல நமக்கு சொந்த அனுபவம் கொஞ்சம் கம்மிதான்னாலும், பசங்க பஞ்சயத்துல அனுபவம் அதிகம். முக்கியமா நம்மளோட நண்பர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், ஏன்னா அடுத்து வரப்போற எழுத்துகளில் எல்லாம் நீங்களும் இருக்கீங்க. (வெறுமுன்னு நம்ம அடிச்ச கூத்த மட்டும் சொன்ன நல்ல இருக்காது பாருங்க).Monday, 6 June 2011
திருமணம்
இந்த மாசத்துல ஒரே நாள்ல மொத்தமா நாலு திருமணத்துக்கு எனக்கு அழைப்பு வந்திருக்கு. எல்லாரும் நீ வந்தாலே வரணுமுன்னு வேற சொல்றாங்க, நாலும் நாலு ஊர்ல வேற. என்னடா பண்றதுன்னு முழிச்சிகிட்டு இருக்கும் போதுதான் இதுவரைக்கும் நான் பார்த்த திருமணங்கள் எல்லாம் ஒன்னு ஒன்னா மனசுல வந்து போச்சு. மகிழ்ச்சி, கடுப்பு, கொண்டாட்டம், அலைச்சல், துயரம் இப்படி நிறையா நினைவுகள். ஒரு திருமணத்துக்கு போயிட்டு வர்ற அனுபவம் வயசுக்கு வயசு மாறுது, சின்ன வயசுல வெறும் மகிழ்ச்சியா மட்டுமே இருக்குறது பெருசானா பொறுப்பா மாறிருது. Sunday, 29 May 2011
பள்ளி! . . கல்வி! . . படிப்பு !
நேத்து நானும் என்னோட நண்பனும் நடந்து வரும் போது ஒரு விளம்பரப்பலகைய பாத்தேன், ஒன்றை வயசு பிள்ளைகள கூட இங்க வந்து விடுங்க "நாங்க இருக்கோம்னு" எதோ கண்ணாடி விளம்பரத்துல சொன்ன மாதிரியே போட்டிருந்தான். இது என்னடானு நின்னு பாத்தா அது ஒரு பள்ளிக்கூடத்துக்கான விளம்பரப்பலகை. என்னமோ தெரியல பள்ளிக்கூடத்துல சேருவதுக்கான வயச கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டே வர்றாங்க, என்னோட அப்பா 5 வயசுல ஒன்னாம் வகுப்புக்குத்தான் பள்ளிக்கே போனாரு, என்னைய 3 வயசுல (LKG) பள்ளிக்கு அனுப்பிட்டாங்க. இப்போ என்னடான்னா ஒன்றை வயசுல அனுப்புறாங்க. இப்படியே போன, 6 மாச குழந்த அடுத்ததா பிறந்த பிள்ளையைக்கூட கொண்டுபோய் விட்ருவாங்க போலருக்கு.
Sunday, 22 May 2011
(ஆ..)ரம்பம்!
வலைப்பூ ஒன்று துவங்கி அதில் எனது கருத்துக்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் பல நாள் ஆசை. சரி என்று வலைப்பூவை துவக்கினால் அதில் எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்பதில் பெருங்குழப்பம் . பேசுவதற்கு உகந்த செய்திகளோ நிறைய உள்ளது அவற்றில் எதை முதலில் சொல்வது, "கழுதையின் இரு பக்கங்களிலும் அதற்கு பிடித்த உணவுகளை வைத்தால், அது எதை முதலில் உண்பது என்ற குழப்பத்திலேயே பட்டினி கிடைக்குமாம்". அது போல எதை முதலில் எழுதுவது என்று யோசித்தே ஒரு வாரம் கடந்து விட்டது .
அது தவிர அனைவரும் படிக்கத்தக்க வகையில் நல்ல நடையில் எழுதவேண்டுமே என்ற அச்சம் வேறு. நண்பர்களிடம் வலைப்பூ துவங்கும் செய்தியை சொல்லி அவர்களின் மறுமொழிகளை வைத்து ஏதாவது எழுதுலாம் என்று அவர்களிடம் சென்றால், மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் பலர், "சிரிப்பு வருகிறது" என்றான் ஒருவன், "ஒன்றுமே தோன்றவில்லை" என்றான் ஒருவன், "நன்றாக செய்" வாழ்த்தினான் ஒருவன், "நானும் சில கட்டுரைகளை தருகிறேன்" என்றான் ஒருவன், "பண உதவி எதுவும் வேண்டுமா" என்றான் ஒருவன்.
என்னை பற்றியாவது எழுதலாம் என்றால், இருபத்தைந்து வயதாகியும் படிக்கிறேன் என்ற பெயரில் என் தந்தையின் பணத்தில் வாழ்வதை தவிர வேறு எதையும் நான் சாதித்ததுமில்லை. இப்படி குழம்பிப்போய் எதுவுமே எழுதாமல் போவதற்கு பதில், இதை எழுதி உங்களையாவது குழப்பலாம் என்றே இதை எழுதுகிறேன். (பிழைகளை தயவு செய்து பொருத்தருள்க).
Subscribe to:
Comments (Atom)