Thursday, 14 July 2011

-:வில்லன்:- (காதல் - 2)


நமக்கும் பொண்ணுங்களுக்கும் இன்னைக்கு நேத்தில்ல என்னைக்குமே பதினஞ்சுல பாதிதான். அதுக்கு முக்கியமான காரணம் என்னோட பேச்சுதான்னு நினைக்கிறேன், பசங்கக்கிட்ட பேசுற மாதிரியே அவுங்கக்கிட்டையும் பேசுனா பாவம் என்னதான் பண்ணுவாங்க (அதனாலயே பொண்ணுங்கக்கிட்ட பேசுறதையே சுத்தமா குறைச்சுகிட்டேன்). அதுலயும் 11ஆம் வகுப்பு போற சமயத்துல நமக்கு ஏகப்பட்ட திமிரு, பொண்ணுங்கள எந்நேரமும் திட்டிக்கிட்டே இருப்பேன் ஏன்னு இன்னவரைக்கும் தெரியல. இந்த மாதிரி ஒரு சமயத்துலதான் நம்ம 'சின்னமுழி சித்தன்'(அவன் தலையெழுத்து) வகையா வந்து கையில மாட்டுனான்.

 

 நீங்க 11 வது, 12 வதுல கணிதம் இருக்குற பாடத்திட்டத்துல படிச்சிருந்தா கண்டிப்பா 'டியூஷன்' என்கிற சிறப்பு வகுப்புகள்ல இருந்து தப்பிச்சிருக்கவே முடியாது. நாங்க படிச்சது பசங்களுக்கான பள்ளி, அதனால இந்த மாதிரி சிறப்பு வகுப்புகள்ல மட்டும்தான் பொண்ணுங்கள பார்க்கவே முடியும். அந்த மாதிரி ஒரு சிறப்பு வகுப்புக்கு போன இடத்துலதான் நம்ம 'சின்னமுழி சித்தன்' ஒரு பொண்ணுக்கிட்ட கவுந்துட்டான். அந்த தாய்க்குலத்துக்கும் நம்ம பயல புடிக்கத்தான் செஞ்சுது, ஆனா என்னமோ இரண்டு பேருமே சொல்லிக்காம இருந்துட்டாங்க.

அவனோட கெரகம், ஒருநாள் சும்மா தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி அவனோட வகுப்புக்கு கூட்டி போனான், இத்தனைக்கும் நானும் அவனும் வேற வேற இடத்துல படிச்சோம். போன இடத்துல நமக்கும் அந்த தாய்க்கும் சண்டையாகி போச்சு, ஆனா நம்ம சி.மு.சித்தன் அவுங்கள காதலிக்கிற சங்கதி அப்ப எனக்கு தெரியாது. பொதுவா பசங்க காதலிச்சா பொண்ணுங்ககிட்ட சொல்லுறாங்களோ இல்லையோ நண்பர்கள்கிட்ட முதல்ல சொல்லுவாங்க, ஆனா நம்ம சி.மு.சித்தன் யார்கிட்டையும் சொல்லவே இல்ல. என்னமோ தெரியல பசங்களுக்கு காதல் வந்துச்சுனா, புத்தி காத்து வாங்க போயிருது

அப்பறமா காதல் சங்கதி தெரிஞ்சதும் இன்னும் நிறைய சண்டைகள்தான் வந்துச்சு. அந்த பொண்ணுக்கு, நம்ம சி.மு.சி. எனக்கு அவளைவிட அதிகமா முக்கியத்துவம் கொடுக்குரான்னு கோபம். எனக்கு, அந்த பொண்ணு யாருடா எங்களுக்கு நடுவுலன்னு கடுப்பு, பாவம் சி.மு.சி.தான் இங்கிட்டும் இல்லாம அங்கிட்டும் இல்லாம நடுவுல மாட்டிக்கிட்டு கண்டமெனிக்கு முழிச்சான்.
 
திரைப்படங்கள்லதான் எப்பவுமே காதலன் தன்னோட நண்பர்கள காதலிகிட்ட அசிங்கப்படுதிக்கிட்டே இருப்பான்.ஆனா உண்மைல எனக்கு தெரிஞ்சு பசங்க அவனோட ஆளு முன்னாடி தன்னோட நண்பர்கள விட்டுக்கொடுகிறது இல்ல அல்லது என்னோட நண்பர்கள் அத செஞ்சது இல்ல. நான் எவ்வளவுதான் சண்டை போட்டாலும் சி.மு.சித்தன் அமைதியாத்தான் இருந்தான். நான்தான் அவுங்க இரண்டு பேரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிறுக்காப்படுத்தீட்டேன், ஒரு கட்டத்துல நம்ம சி.மு.சியே வெறியாகி "இனிமே தயவு செய்து நீ தலையிடாதேன்னு" கெஞ்சவும்தான் விட்டேன்

அதுக்கு பிறகு அவனோட காதல் சமாச்சாரத்துல நான் தலையிடவே இல்ல, அவனோட காதல் என்னாச்சுன்னு கூட எனக்கு தெரியாது .என்னோட உயர்நிலை பள்ளி வாழ்க்கையில, பார்த்தது சி.மு.சி.யோட காதல மட்டும்தான் அதுலயும் 'வில்லன்'னு பேர் வாங்க வேண்டியதா போச்சு. அதுக்கு பிறகு இரண்டு வருடம் கழிச்சு சித்திரை திருவிழால வழக்கம் போல நானும், நம்ம விஞ்ஞானியும் மாசி வீதியப் பக்கம் திரியும் போது அந்த தாய பார்த்தேன், வேற ஒரு பையனோட!.  

3 comments:

  1. Kanna... Kanna... kannaaa.... avanthan thana ivan?????????

    ReplyDelete
  2. enda mahesh athu pacha kili thane nee sollrathu? ana avan ta neriya killi irutheche da?

    ReplyDelete
  3. Excellent flow....should have extended it, felt like a sudden finish!

    ReplyDelete