நேத்து நானும் என்னோட நண்பனும் நடந்து வரும் போது ஒரு விளம்பரப்பலகைய பாத்தேன், ஒன்றை வயசு பிள்ளைகள கூட இங்க வந்து விடுங்க "நாங்க இருக்கோம்னு" எதோ கண்ணாடி விளம்பரத்துல சொன்ன மாதிரியே போட்டிருந்தான். இது என்னடானு நின்னு பாத்தா அது ஒரு பள்ளிக்கூடத்துக்கான விளம்பரப்பலகை. என்னமோ தெரியல பள்ளிக்கூடத்துல சேருவதுக்கான வயச கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டே வர்றாங்க, என்னோட அப்பா 5 வயசுல ஒன்னாம் வகுப்புக்குத்தான் பள்ளிக்கே போனாரு, என்னைய 3 வயசுல (LKG) பள்ளிக்கு அனுப்பிட்டாங்க. இப்போ என்னடான்னா ஒன்றை வயசுல அனுப்புறாங்க. இப்படியே போன, 6 மாச குழந்த அடுத்ததா பிறந்த பிள்ளையைக்கூட கொண்டுபோய் விட்ருவாங்க போலருக்கு.
Sunday, 29 May 2011
Sunday, 22 May 2011
(ஆ..)ரம்பம்!
வலைப்பூ ஒன்று துவங்கி அதில் எனது கருத்துக்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் பல நாள் ஆசை. சரி என்று வலைப்பூவை துவக்கினால் அதில் எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்பதில் பெருங்குழப்பம் . பேசுவதற்கு உகந்த செய்திகளோ நிறைய உள்ளது அவற்றில் எதை முதலில் சொல்வது, "கழுதையின் இரு பக்கங்களிலும் அதற்கு பிடித்த உணவுகளை வைத்தால், அது எதை முதலில் உண்பது என்ற குழப்பத்திலேயே பட்டினி கிடைக்குமாம்". அது போல எதை முதலில் எழுதுவது என்று யோசித்தே ஒரு வாரம் கடந்து விட்டது .
அது தவிர அனைவரும் படிக்கத்தக்க வகையில் நல்ல நடையில் எழுதவேண்டுமே என்ற அச்சம் வேறு. நண்பர்களிடம் வலைப்பூ துவங்கும் செய்தியை சொல்லி அவர்களின் மறுமொழிகளை வைத்து ஏதாவது எழுதுலாம் என்று அவர்களிடம் சென்றால், மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் பலர், "சிரிப்பு வருகிறது" என்றான் ஒருவன், "ஒன்றுமே தோன்றவில்லை" என்றான் ஒருவன், "நன்றாக செய்" வாழ்த்தினான் ஒருவன், "நானும் சில கட்டுரைகளை தருகிறேன்" என்றான் ஒருவன், "பண உதவி எதுவும் வேண்டுமா" என்றான் ஒருவன்.
என்னை பற்றியாவது எழுதலாம் என்றால், இருபத்தைந்து வயதாகியும் படிக்கிறேன் என்ற பெயரில் என் தந்தையின் பணத்தில் வாழ்வதை தவிர வேறு எதையும் நான் சாதித்ததுமில்லை. இப்படி குழம்பிப்போய் எதுவுமே எழுதாமல் போவதற்கு பதில், இதை எழுதி உங்களையாவது குழப்பலாம் என்றே இதை எழுதுகிறேன். (பிழைகளை தயவு செய்து பொருத்தருள்க).
Subscribe to:
Comments (Atom)