நேத்து நானும் என்னோட நண்பனும் நடந்து வரும் போது ஒரு விளம்பரப்பலகைய பாத்தேன், ஒன்றை வயசு பிள்ளைகள கூட இங்க வந்து விடுங்க "நாங்க இருக்கோம்னு" எதோ கண்ணாடி விளம்பரத்துல சொன்ன மாதிரியே போட்டிருந்தான். இது என்னடானு நின்னு பாத்தா அது ஒரு பள்ளிக்கூடத்துக்கான விளம்பரப்பலகை. என்னமோ தெரியல பள்ளிக்கூடத்துல சேருவதுக்கான வயச கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டே வர்றாங்க, என்னோட அப்பா 5 வயசுல ஒன்னாம் வகுப்புக்குத்தான் பள்ளிக்கே போனாரு, என்னைய 3 வயசுல (LKG) பள்ளிக்கு அனுப்பிட்டாங்க. இப்போ என்னடான்னா ஒன்றை வயசுல அனுப்புறாங்க. இப்படியே போன, 6 மாச குழந்த அடுத்ததா பிறந்த பிள்ளையைக்கூட கொண்டுபோய் விட்ருவாங்க போலருக்கு.
அதுதான் போகட்டும்னு பாத்த முக்கவாசி பேர் ஆங்கிலத்துல சொல்லிதர்ற தனியார் பள்ளிலதான் சேர்பேன்னு போறாங்க. அங்க நம்ம பங்காளிகளோ ஒன்னாவதுகே 12000 கேட்குறான். இப்படித்தான் சமீபத்துல கோயம்புத்தூர்ல 12000 குடுக்க முடியாம நகையெல்லாம் அடகு வச்சு பாத்து கடைசியா அந்த பையனோட அம்மா தற்கொலையே பண்ணிக்கிட்டாங்க. ஆனா நம்ம தனியார் பள்ளிக்கூட பங்காளிகளோ அத பத்தி எனக்கு என்னானு காசு வாங்கிக்கிட்டுதான் இருக்கான். ஏன்டா இவளவுனு கேட்டா, அவளவு கொடுத்தாதான் நல்லா சொல்லிதர முடியும்ங்குறான்.அட அவன விடு, நம்மாளுங்க நிறைய பேரே அங்க படிச்சா தான் பெரியாளுனு நினைக்குறாங்க, என்னத்த சொல்ல. ஆக மொத்தம் காசில்லாதவன் மட்டும் தான் அரசு பள்ளிகள்ல படிக்கணும்னு ஆகிபோச்சு. சரி ஆங்கில பள்ளில சேத்துடாவது சும்மா இருக்காங்களா அதுவும் இல்ல, அங்கதான் புதுசா ஒன்னு கிளம்பும்.
மதுரைல என்னோட வீட்ல தூங்கும் போதெல்லாம் ஒரு தொல்ல, என்னோட அறைக்கு பகத்திலேயே தெருக்குளாய் ஒன்னு இருக்கா, தண்ணி பிடிக்க வர்றவங்க சத்தம் கேட்டு காலைலேயே முழிப்பு வந்துரும். அதே மாதிரி இந்ததடவ ஊருக்கு போனப்பகூட முழிப்பு தட்டிருச்சு, தூக்கம் போன கோபத்த விட அவுங்க பேசுன பேச்சுதான் அதிகமா கடுப்பேதிடிச்சு.
அத நீங்களே கேளுங்க, "அக்கா, என் பையன் ஒழுங்காவே மார்க் வாங்க மாட்டேங்குறான், வெறும் அம்பது, அருபதுன்னு எடுக்குறான், என்ன பண்றதுனே புரியல." அப்படின்னு ஒரு புலம்பல்.
அதுக்கு பதில் "என்னோட பொண்ணும் அப்படித்தான் இருந்தா, பக்கத்து தெரு ______ கிட்ட டியூஷன் போனதுல இருந்து நல்லா படிக்கிற தெரியுமா, பேசாம நீயும் அங்கயே அனுப்பிடு. வீட்டுலயும் கொஞ்சம் தொல்ல கொறையும்".
யாருடா அதுன்னு வெளிய போய் பாத்தா, முதல்ல பேசுனவங்க பையன் நேத்து கூட அழுதுகிட்டேதான் பள்ளிக்கு போனான்(LKG). இரண்டாவது பேசுனவங்க பொண்ணு இந்த வருடம்தான் அழுகைய நிறுத்திருக்கு(1வது). வீட்டுக்கு வந்தாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு பிள்ளைங்க பாத்தா, மறுபடி டியூஷன் போன்னு துரத்தல். அங்க போய் பள்ளிக்கூடத்துல என்ன படிச்சியோ அத அப்படியே வாந்தி எடுக்கணும். சின்ன பிள்ளைகளுக்கு எதுக்குடா இந்த டியூஷன் கண்றாவீனு கேட்டுபாருங்க இப்பவே இப்படி படிச்சாதான் பின்னாடி மாநிலத்துல முதலா வருவன்னு தயங்காம பதில் வரும். எனக்கு தெரிஞ்சு மாநிலத்துல முதலா வர்ற பல பேர் அன்னைக்கு செய்தித்தாள நிறப்புரதோட சரி. என்னமோ போங்கன்னு செய்திகள பாத்தா, அதுல இந்த டியூஷன் பத்தி வர்ற செய்திகள் அதுக்கு மேல இருக்கு.
புதுசா ஒன்னும் இல்ல, திருவள்ளூர் மாவட்டத்துல ஒரு இடத்துல டியூஷன் சொல்லித்தர்ற ஒருத்தருக்கும் அவர்கிட்ட படிக்கவந்த பொண்ணோட அம்மாவுக்கும் (கள்ள)காதல் ஏற்பட்டு, ஊர விட்டே ஓடிட்டாங்கலாம். பிள்ளையோட படிப்புக்காகத்தான் அந்த இரண்டு பேரும் "இந்த தியாகத்த" செஞ்சங்கன்னு நினைக்கும் போது மனசு உருகி ஆனந்தக் கண்ணீர் வருது. இதாவது பல தடவ நாம கேள்விப்பட்ட செய்தியா இருக்கும் , ஆனா வேற ஒரு இடத்துல தன்கிட்ட டியூஷன் படிக்க வந்த 11 வயசு பெண் பிள்ளைய அந்த ஆசிரியர் கடத்திட்டு போய்டாராம். ஒரு வழியா காவல் துறை அவன கண்டுபிடிச்சு ஏன் கடத்துனேன்னு கேட்ட, "பாசத்துல கடத்துனேன் அந்த பிள்ளைய நாந்தான் வளர்பேன்னு" சொல்லி அடம்பிடிச்சுருகாரு நம்ம வாத்தியாரு, பெத்தவங்க பாடு கொஞ்சம் சிரமம்தான்.
அதுக்கும் மேல அவன்/ள் படிச்சு நல்ல மதிப்பெண் வாங்கிட்டா போதும் உடனே பெத்தவங்க சொல்லிருவாங்க, ஒன்னு மருத்துவராகனும் இல்ல பொறியாளராகனும். தவறியும் கூட அவுங்க ஆசை என்னானு கேட்க மாட்டாங்க. இன்னொரு கொடுமை என்னன்னா, எந்த பொறியியல் துறைய படிச்சாலும் முடிவுல பலரும் போக போறது என்னமோ ஐ.டி (எ) தகவல் தொழில்நுட்ப துறைதான், அங்க போய் படிச்சது ஒன்னு, கிடச்சது ஒன்னு அதனால பிதுங்குது எங்களோட கண்ணுன்னு வேலைய பாத்து காசு வாங்குறதுதான். பல விதமான படிப்புகள் இருக்கற இந்த காலத்துல அவுங்களுக்கு என்ன நல்லா வரும்ன்னு பாத்து சேத்துவிடுர்ற பெத்தவுங்களும் கம்மிதான். அதையும் மீறி ஆசைப்பட்டத படிக்கிறது மிக சிலர் தான் பாவம். தமிழ்ல 'கல்'ன்னு கல்விய குறிக்கிற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் "தோண்டு", உண்மையான கல்வி நம்ம நாமே தோண்டி உள்ள என்ன இருக்குன்னு பார்க்க உதவனும். அப்படி இல்லாம சும்மா சம்பாதிக்க உதவுவது மட்டும் கல்வியில்ல. என்ன செய்ய அப்படித்தான் நாம வளர்றோம்.
ஆனா படிப்பப் பத்தி சில நல்ல செய்திகளும் இல்லாம இல்ல, இந்த வருடம் சிவில் சர்விஸ் தேர்வுல தேர்வான 920 பேர்ல நம்ம தமிழ்நாட்டுல இருந்து 98 பேர் தேர்வாகிருகாங்க. அதுவும் இல்லாம புழல் சிறையில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுன 23 கைதிகளும் மொத்தமா தேர்வாகிருகாங்க. இது போன்ற செய்திகள் நம்பிக்கையான மகிழ்ச்சி அளிப்பது என்னவோ உண்மைதான். இனிமே வரபோறது நமக்கான காலம், நாமாவது உருப்படியா எதாவது செய்யணும். (இக்கட்டுரையில் சில இடத்துல ஆங்கில சொற்கள் இருக்கு, அதுக்கு எல்லாம் தமிழர்த்தம் தெரிந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்)
Hi Man! I agree with you! 100% correct!
ReplyDeleteOne of collegues is searching school for one year kid. I asked her, "Why are you searching now itself?" She is replying like "In some schools and and registrations are closed before 4 years prior to admission." She added like "Few are registering for school admission even before fixing marriage"
So funny guys! Seriously,I strongly disagree on the schooling patterns and the way We learn things. Actually it is not at all learning. True Learning can happen only from us out of our interest.
Nice Blog Man! Keep it Up!
மிக்க நன்றி செந்தில் . !
ReplyDelete