Monday, 6 June 2011

திருமணம்


இந்த மாசத்துல ஒரே நாள்ல மொத்தமா நாலு திருமணத்துக்கு எனக்கு அழைப்பு வந்திருக்கு. எல்லாரும் நீ வந்தாலே வரணுமுன்னு வேற சொல்றாங்க, நாலும் நாலு ஊர்ல வேற. என்னடா பண்றதுன்னு முழிச்சிகிட்டு இருக்கும் போதுதான் இதுவரைக்கும் நான் பார்த்த திருமணங்கள் எல்லாம் ஒன்னு ஒன்னா மனசுல வந்து போச்சு. மகிழ்ச்சி, கடுப்பு, கொண்டாட்டம், அலைச்சல், துயரம் இப்படி நிறையா நினைவுகள். ஒரு திருமணத்துக்கு போயிட்டு வர்ற அனுபவம் வயசுக்கு வயசு மாறுது, சின்ன வயசுல வெறும் மகிழ்ச்சியா மட்டுமே இருக்குறது பெருசானா பொறுப்பா மாறிருது.  


எனக்கு வெவரம் தெரிஞ்சு முதல்ல நான் போனது என்னோட மூத்த மாமாவோட திருமணம்தான்.அப்பெல்லாம் எந்த திருமண வீட்டுக்கு போகனும்னாலும் உடனே அப்பா எனக்கு ஒரு புது துணி வாங்கிட்டு வந்துருவாரு. அதனாலேயே எதாவது அழைப்பு வந்தாலே ஒரே கொண்டாட்டம்தான். அடுத்ததா என்னோட அத்தை, சித்தப்பாகளோட திருமணம்ன்னு வரும் போது நம்ம யோசனையெல்லாம் பள்ளிக்கு விடுப்பு எடுக்குறதுல மட்டும்தான் இருந்துச்சு. அதுக்குமேல வர்ற அத்தை பசங்களோட விளையாட்டுன்னு ஒரே ஆட்டம் பாட்டமா முடிஞ்சு போயிரும்.  

மொதமொதல்ல எனக்கும் பொறுப்பு வந்தது அல்லது அப்படி நான் நெனச்சது, என்னோட இரண்டாவது மாமாவோட திருமணத்தப்பதான். நம்ம நண்பர்கள் பத்துபேர் மதுரைல இருந்து கிளம்பினோம், அப்பதான் என்னோட அப்பா என்கிட்ட "டேய் பசங்கள கூட்டிக்கிட்டு வர்றது பெருசில்ல தம்பி, அவுங்கள நல்ல நீதான் பாத்துக்கணும் வேற யாரையும் எதிர்பார்க்கக்கூடாது" அப்படின்னு முதல் பொறுப்பக் கொடுத்தாரு. நல்ல பாத்துக்கிட்டேனான்னு கேட்டா, சத்தியமா இல்லைன்னுதான் நெனைக்கிறேன். ஏன்னா அதுக்கு பிறகு கும்பகோணத்துல நடந்த எந்த திருமணத்துக்கும் மூணு பேர்க்கு மேல வந்ததே இல்ல

இருக்கதுலே  என்னக்கு மகிழ்ச்சியான திருமணம்னுனா அது நம்ம 'நாய்' சேகரோடதுதான். ஏன்னா அவனோடது காதல் திருமணம், அதுக்கு நானும் எதோ ஒருவகைல உதவியா இருந்தேன்ற காரணம்தான். ஒரு சின்ன அணிலா இருந்து (நம்ம இனா.தனா .விஜய் மாதிரியான அணில் இல்லங்க) அவுங்களோட காதல சேத்துவைக்க என்னால ஆனத செஞ்ச மகிழ்ச்சியோட, அதிக நாளுக்கு பிறகு கல்லூரி நண்பர்கள பார்க்க போறோம்கிற மகிழ்ச்சியோட அந்த திருமணம் அமைஞ்சது.

என்னோட அண்ணன் திருமணம்தான் உண்மைலே திருமண வீட்ல எவளவு வேலை இருக்கும்ன்னு எனக்கு காட்டுனது. என்னதான் என்னோட தம்பி பார்த்ததுல நூத்துக்கு பத்து மடங்கு வேலை கூட பாக்கலைனாலும், குறைஞ்சது ஒன்பது மடங்கு வேலையாவது பார்த்திருப்பேன். அதுவரைக்கும் திருமணங்கள் அப்படினாலே இருந்த ஒரு பின்பம் மாறி, அந்த வீடுகள்ள உள்ளவுங்க எவளவு சிரமப்படுராங்கன்னு தெரியவந்துச்சு. என்னதான் விடிய விடிய தூங்காம வேலை பார்த்தாலும், திருமணத்தப்ப பட்டு வேட்டி கட்டிக்கிட்டு பசங்களோட மண்டபத்துல வலம் வரும் போது ஒரே ஆனந்தமா இருந்துச்சு (அடுத்தது உனக்குதாண்டா திருமணம்ன்னு நிறைய பேர் சொல்ற வரைக்கும்).

பொதுவா திருமணம்னாலே ஒரே கொண்டாட்டம்தான், ஆனா என்ன மிகவும் வருத்தப்படவச்ச திருமணமும் இருக்கு, அது தான் என்னோட காதலியோடது. இதுல வேற தோதுக்குனு அவளோட திருமணம் நடந்தன்னைக்கு எனக்கு உடம்புக்கு முடியாம போய் மருத்துவமனை போக வேண்டியதாபோச்சு, ஒன்னும் இல்ல மொதநாள் தின்னது ஏதோ கோளாறு பண்ணிருச்சு (அப்படின்னு ஒரு மருத்துவர் சொன்னத நம்பி சும்மா விட்டு, இரண்டு வருடம் கழிச்சு அதே பிரச்சனைல அறுவை சிகிச்சை பண்ணி உயிருக்கே விளையாட்டு கட்டினது வேற பஞ்சாயத்து). ஒரு கூத்து என்னனா இப்படி அவளோட திருமணம் நடந்தன்னைக்கு மருத்துவமனைக்கு போனதுல வீட்ல எல்லாரும் "பய தற்கொலை முயற்சிபண்ணிருகான்னு" முடிவு பண்ணிடாங்க. எல்லாம் பழைய தமிழ் திரைப்படங்கள் பார்த்த பாதிப்பு, நம்ம ஒன்னும் பண்ணமுடியாது.

பின் குறிப்பு:

வழக்கம் போல இந்த வாரமும் எதை எழுதுறதுன்னு குழம்ப ஆரம்பிச்சேன், "என்ன யோசனைன்னு" நம்ம குண்டல வண்டன் கேட்டதுக்கு என்னோட குழப்பத்தச்  சொன்னேன். அப்படியே ஒரு பார்வை பார்த்தான், என்ன அர்த்ததுல அவன் பார்த்தான்னு தெரியல ஆனா என்னக்கு ஒன்னு தோனுச்சு. என்னமோ நாம எழுதுறத ஊரே படிக்கிற மாதிரியும், இந்த வாரம் எழுதாம போனா "ஏன் எழுதலைன்னு?" எல்லாரும் கேட்க போறது மாதிரியும்ல யோசிக்கிறோம். நாமலே அனாமத்தா என்னத்தையாவது எழுதுறோம், எழுதிவிட்டு ஒவ்வோருதனுக்கா கைபேசில கூப்பிட்டு "என்ன படிச்சியான்னு?" கேட்டு வம்படியா படிக்கவைக்க வேண்டியது. இதுல ஏன்டா உனக்கு இவளவு யோசனைன்னு எனக்கு நானே ஒரு கேள்வி கேட்டுக்கிட்டேன். ஆனா நண்பர்களே தயவு செய்து மேல நான் எழுதிருக்க எதையும் பார்த்து, "அப்பாடா இவன் திருந்திட்டான், இனிமே நமக்கு கைபேசில கூப்பிட்டு "என்ன படிச்சியான்னு?" கேட்கமட்டான்னு" நினைக்காதீங்க. இதுக்கெல்லாம் அசர்ற ஆள் நானில்லை !

10 comments:

  1. Hi Man,

    As We grow Our experiences differ as our perception on the life changes about s(o/a)me thing.
    Anyway, Nice attempt to have one blog per Week.

    ReplyDelete
  2. Nice attempt. Keep on posting interesting and useful-things. All the best.

    ReplyDelete
  3. mm very nice mama
    nadatha marriagea pathi sollita nadaga pora namma friends marriageku eppadi poga poroam idea pathi ellutha vitu da mama

    ReplyDelete
  4. writing style is ok... keep it up... :)

    ReplyDelete
  5. ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பர்களே !

    ReplyDelete
  6. good da..... awaiting for u r marraige and u r own comments regarding it

    ReplyDelete
  7. Man, the choice of words are really getting awesome..but in every blog u specify the circumstances that lead u to start writing, better can be avoided.

    ReplyDelete
  8. Mahesh, you are too good .... i like you ...

    ReplyDelete