Friday, 24 June 2011

காதல்



நம்ம குண்டல வண்டனுக்கு என்னாச்சு தெரியல நேத்து முழுக்க வழக்கத்துக்கு மாறா ஒரே மகிழ்ச்சியா இருந்தான். என்னடா இதுன்னு யோசிக்கும் போதுதான் எனக்கு காரணமும் புரிஞ்சு, ஒரு ஞாபகமும் வந்துச்சு, "அட இரண்டு வாரமா நம்ம ஒண்ணுமே எழுதலா!". இதுக்காகவது எழுதனும்ன்னு துவங்கிட்டேன், தலைப்பு என்னமோ முன்னையே முடிவானதுதான், சும்மாவா உலகளாவிய தலைப்பாச்சே. என்ன பல பசங்க பீதில சொல்லாமையே விடுருவானுங்க, சில பசங்க உள்ளதாகுதுன்னு சொல்லிருவானுங்க, ஆனா இத கடக்காம எனக்கு தெரிஞ்சு ஒரு பய வந்தது இல்ல. இதுல நமக்கு சொந்த அனுபவம் கொஞ்சம் கம்மிதான்னாலும், பசங்க பஞ்சயத்துல அனுபவம் அதிகம். முக்கியமா நம்மளோட நண்பர்கள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், ஏன்னா அடுத்து வரப்போற எழுத்துகளில் எல்லாம் நீங்களும் இருக்கீங்க. (வெறுமுன்னு நம்ம அடிச்ச கூத்த மட்டும் சொன்ன நல்ல இருக்காது பாருங்க).


'காதல்' அப்படினா என்னன்னு கேட்டா கண்டிப்பா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கம் தருவாங்க, இதுதான் காதல்ன்னு ஒரே மாதிரி எல்லோராலும் சொல்ல முடியல. அந்த உணர்வு கண்டிப்பா மனசுக்கு மனசு வேறுபடுது, அது யாரையும் விட்டுவைக்கிறதும் இல்ல நம்ம 'நாய் சேகர்'ல இருந்து 'திருமங்கல திமிங்கலம்' வரைக்கும். என்ன ஆளாளுக்கு ஏத்த மாதிரியான கோமாளித்தனம் பண்ணுவோம், குறிப்பா காதல சொல்லும்போது. ஆனா பெண்களுக்கு  முக்காவாசி வெறும் பதில் சொல்ற வேலைதான் (அதுவும் ஒரு ஆறு ஏழு மாசம் அலையவிட்டு), அதனால இந்த பஞ்சாயத்து வர்றதில்ல. 

  எல்லாரையும் போல எனக்கும் காதல் அப்படிங்கற சங்கதி முதல்ல அறிமுகமானது திரைப்படத்துலதான்.  நான் நேர்ல பார்த்த காதல்னா அது என்னோட பள்ளிப்பருவத்துல சில பிஞ்சுல பழுத்த 'எமப்பக்கி'கலோடது, சொன்ன நம்பமாட்டிங்க அஞ்சாவதுலேயே ஒரு காதல (அப்படிதான் அவன் சொல்லிக்கிட்டு திரிஞ்சான்) நேர்ல பார்த்தோம். என்னமோ தெரியல அவன் எங்ககிட்ட சொன்னப்ப எனக்கு ஒரே சிரிப்பா வந்துச்சு. அப்பறம் ஆறாவது, ஏழாவதுன்னு வகுப்புகள் போகப்போக ஊருபட்ட கதைகள் வர ஒரே காதல் மயம்தான், அதுல சில தைரியசாலிகள் பொண்ணுங்ககிட்ட சொல்லி வாங்குபட்ட சம்பவங்களும் உண்டு. ஆனா இதையெல்லாம் தாண்டி மொதமொதல்ல அந்த பொண்ணையும் சம்மதிக்க வச்சான் நம்ம 'தி.சாரதி'.  

நமக்கு அப்பெல்லாம்(அப்போ மட்டும்தான்) எவனாவது அவனோட காதல பத்தி சொன்னாலே ஏன்டான்னு இருக்கும், இதுல வேற கண்டிப்பான முறைல சின்ன பிள்ளைகளோட புத்தகத்த திருடி, அதுல இருக்க 'நிலா நிலா ஓடி வா' பாட்ட 'நிலா நீ என்னிடம் வா'ன்னு மாத்தி கவிதை(என்கிற பேர்ல) வேற எழுதி இருக்க உசிர வாங்குவானுங்க. இந்த நிலா என்ன பாவம் பன்னுச்சோ, காதல் கவிதைல இருந்து குறுஞ்செய்தி வரைக்கும் படாத பாடுபடுத்து. அதனாலே இந்த பசங்ககிட்ட அவங்களோட காதல பத்தி அதிகமா பேசவேமாட்டேன். நம்ம தி.சாரதியோட காதல பத்தி கேள்விப்பட்டபோது கூட அவன்கிட்ட பெருசா எதுவும் கேட்டுக்கல, இன்ன வரைக்கும் ஏன் பிரிஞ்சான்னு கூட தெரியாது. இப்படி பட்டும் படாமலும் இருந்த நானும் ஒருத்தனோட காதல்ல கன்னாபின்னன்னு புகுந்து விளையாடி, பெரிய 'வில்லன்' அப்படின்னு பேர் வாங்குனேன்.
                                          தொடரும்  . . . .

பின் குறிப்பு:

           மேல எழுதுனத படிச்சவுடனே நம்ம நண்பர்கள், "அடங்கப்பா வீர சிகாமணி நீ இந்த வேலையெல்லாம் செஞ்சதே இல்லையா?" அப்படின்னு யோசிப்பங்கன்னு நல்ல தெரியும். மேல எழுதுனது எல்லாம் நான் பள்ளி படிக்கும் போது (குறிப்பா பத்தாவது வரைக்கும்) நடந்த கூத்து. கல்லுரி காலங்கள்ல நான் இதவிட நிறைய கோமாளித்தனம் பண்ணி கண்டமேனிக்கு வங்குபட்ட நகைச்சுவை வரலாறு இனி வரும் வாரங்களில் வரும்.     

1 comment:

  1. Start pannu ippathan pillaiyar suli potruka....

    ReplyDelete