“எதை எதையோ
பார்த்துட்டோம், இத பார்க்க மாட்டோமா” இதுதான் இன்னைக்கு காலையில எழுந்ததும் நான் கேட்டது.
என்னோட அம்மா யார்கிட்டயோ கைபேசியில சொல்லிக்கிட்டு இருந்தாங்க. எங்கும் எதிலும் எப்பொழுதும்
கொரோனா பத்தியேதான போய்க்கிட்டு இருக்கு. உலகத்தையே ஆட்டி படைக்கிற ஒன்னப் பத்தி எப்படி
பேசாம இருக்க முடியும்.
நாமளே சும்மா
இருந்தாலும், இன்னைக்கு புதுசா இத்தனை பேருக்கு வந்திருக்கு, அதுல இறந்தவங்க இத்தனை
பேருன்னு, காலங்காத்தாலையே நம்ம கைக்குள்ள தகவல் வந்திருது. இது உலகத்தின் முதல் தொற்று
நோய் இல்ல, இதுவே கடைசியாவும் இருக்கப் போறதும் இல்ல. எத்தனையோ நோய்கள பார்த்திருக்கோம்ன்னாலும்
இது பரவுற விதமும் வேகமும்தான் அச்சத்தக் கொடுக்குது.