Thursday, 1 September 2011

குல்லா போடுனும்(மா)


நான் வலைப்பூ துவங்குனதுல இருந்து இப்பதான் உருப்படியா ஒரு செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். தயவு செய்து இந்த பதிவ நிறைய பேரை படிக்க வைங்க, அல்லது இந்த செய்திய நீங்களா உங்களுக்கு தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லுங்க. நமக்கு தேவை இது எல்லார்கிட்டயும் போய் சேரனும்.


கடந்த சில தினங்களா அல்லது மாதங்களா எங்க பார்த்தாலும் போராட்டங்களாத்தான் இருக்கு. லஞ்ச உழல ஒழிச்சு ‘இந்திய’ தேசத்த தூக்கி நிறுத்த ‘அண்ணா ஹசரே’ நடத்தும் போராட்டத்துக்கு நம்மல்ல நிறைய பேர் ஆதரவு குரல் கொடுத்தது மகிழ்ச்சியான சங்கதி. மாண்புமிகு ‘அண்ணா ஹசரே’ அவர்களுக்கு என்னோட வாழ்த்துகள், சும்மாவா நம்ம ஊருல சொல்லுவாங்களே ‘திருப்பதிக்கே லட்டுன்னு’ அது மாதிரி நம்ம மத்திய அரசுக்கு அவுங்களோட ‘குல்லா’வ போட்டே ஆட்டம் கொடுத்துட்டாரு.

பொதுவா நகரத்து நண்பர்கள் அதுவும் குறிப்பா பொருளாதார அடிப்படைல மேல்தட்டுல இருக்க மக்களுக்கு எந்த பொறுப்பும் இல்ல அவுங்க எந்த போராட்டத்துளையும் கலந்துக்க மாட்டாங்கன்னு ஒரு கருத்து இருக்கு. ஆனா அதை எல்லாம் ஒடச்சு எறிஞ்சு, நாங்களும் ‘நல்ல’ காரணத்துக்காக தெருவுல இறங்கி போராட தயார் அப்படின்னு அழுத்தமா பதிவுசெஞ்சுட்டாங்க.

இதுல இன்னும் மகிழ்ச்சியான சமாசாரம் என்னன்னா ‘முகநூல்’(Facebook) போன்ற வலைதளங்கள் தமண்ணாவுக்கு தாவணி நல்ல இருக்குமான்னு விவாதிக்க மட்டும் இல்ல, நிறையா நல்ல சங்கதிகளுக்கும் பயன்படும்ன்னு காட்டிட்டாங்க. தினமும் எத்தனை மின் அஞ்சல்கள், எத்தனை செய்தி பகிர்வுகள், அது போக பலர் முகத்துல ‘தேசிய’ கொடியோட வண்ணத்த பூசிக்கிட்டு சாலை சந்திப்புகள்ல அதரவு முழக்கங்கள்ன்னு சும்மா நாடே களைகட்டுது.

எல்லாம் சரி இன்னொரு பக்கம் ஒரு போராட்டம் நடக்குதே, அதுதான் நம்ம ‘பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன்’ ஆகியோரது தூக்கு தண்டனைய நிறுத்த சொல்லி நம்ம தமிழ் ஆர்வலர்கள் நடத்தும் போராட்டம். இதுல நம்ம ஏன் நண்பர்களே அதிகமா கலந்துக்கல, இத்தனைக்கும் அதே ‘முகநூல்’ தளத்துலதான் இந்த போராட்டத்தோட பகிர்வுகளும் வருது, (ஒரு வேலை இவுங்க ‘குல்லா’ போட்டு போராடாததுதான் காரணமான்னு தெரியல) இங்க அதரவு மிக மிக குறைவுதான். பாதி பேர் பயத்துல ஒதுங்கி இருக்கோம், மீதி பேர் என்ன நடத்ததுன்னு தெரியாம “ஒரு தேசிய தலைவரை கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பா” அப்படின்னு, உடம்புல குருதி குண்டக்க மண்டக்க கொதிச்சுப்போய் தரவு தரல.

உங்கள்ல பல பேர் சொல்லலாம், “‘அண்ணா ஹசரே’ அநீதியான லஞ்ச உழலுக்கு எதிர அதுவும் அமைதியான வகையில உண்ணாவிரத போராட்டம் நடத்துறார் அதனால தரவு தர்றோம்”. சரிங்க அப்படினா நம்ம தோழி ‘ஐரோம் ஷர்மிளா’ அவர்களுக்கு நீங்க ஏன் தரவு தரல. நம்மள பல பேர்க்கு அந்த தோழி யார்ன்னே தெரியாதே. மணிப்பூரை சேர்ந்த வீர தோழி ‘ஐரோம் ஷர்மிளா’ ராணுவ அதுமிறல்கள் மற்றும் அதுக்கு துணை போகும் Armed Forces (Special Powers) Act (AFSPA)” , அப்படிங்கற சட்டத்தை எதிர்த்து 2000 ஆம் ஆண்டுல இருந்து கடந்த பதினோரு வருடங்களா உண்ணா விரதம் இருக்காங்க.

இப்ப வரைக்கும் அந்த தோழிக்கு வலுக்கட்டாயமா மூக்கில் ஒரு குழாய் மூலமாக உணவு புகட்டப்படுது. இதுல அவுங்க மேல தற்கொலை முயற்சின்னு வழக்கு பதிவுகள் வேற. இத கேட்க ஒரு நாதியும் இல்லையே, (ஒரு வேலை அவுங்களும் ‘குல்லா’ போடாததுதான் தப்பு போல). வட கிழக்கு மாநிலங்களோட மக்கள் படும் சிரமங்கள் சித்திரவதைகள் கொஞ்ச நஞ்சமில்ல ஏராளம். ஆனா அது முழுக்க இருட்டடிப்பு செய்யப்படுது நண்பர்களே, இதுதான் நம்மளோட ‘தேசியம்’.

ஆகவே நண்பர்களே, அந்த முன்று பெரும் ஏற்கனவே இருபது வருடங்கள் சிறை கொடுமைகள்ல வாடி வதங்கிட்டாங்க, இதுக்கு மேல தூக்கு மேடைக்கு அனுப்பறது அநியாயத்தின் உச்சம். இதுல எனக்கு என்ன பெருத்த ஏமாற்றம்ன்னா என்னோட நெருங்கிய நண்பர்கள்ல கூட, ‘ஆங்.அரசகுமார்’ மற்றும் என்னோட பள்ளி தோழனான ‘சிந்தாமணி’ தவிர யாரும் இதுக்கு அதரவு தரலெங்குறதுதான்.

நாங்க உங்ககிட்ட கேட்கிறது எல்லாம் ஒன்னுதான், முதல்ல அவுங்க முன்று பேரை பற்றி மற்றும் அந்த கொலை எப்படி நடந்தது, அதுக்கு முன்னாடி என்னன்ன நடந்தது, தீர்ப்பு நியாயம்ன்னா இத்தனை பேர் எதிர்த்து போராடுவாங்களா, இளம் வயசுல ஒரு பெண் உயிர் தியாகம் பன்னுவாங்களான்னு தயவு செய்து நல்ல தெரிஞ்சுகோங்க, அப்பறமா ஒரு முடிவுக்கு வாங்க. அத விட்டுட்டு கொல்ல பட்டவர் ஒரு முக்கிய புள்ளி அப்படிங்கற ஒரே காரணத்த மட்டும் பார்க்காதீங்க. தோழர்களே நாமதான் ஒன்னு கூடி இத தடுக்கணும், ‘இத்தாலி’யில இருந்து இட்லி விக்க வந்த யாரும் நம்ம ஒன்னும் செய்ய முடியாதுன்னு காட்டனும்.

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!    

4 comments:

  1. Kandippa ethukku ellaarum sernthu poraadanum.....

    ReplyDelete
  2. I Support this. To Get more support from others, we need/should (to) provide details and differences between these 3 death sentenced prisoners and others (Afzal Guru,Kasab,...)

    ReplyDelete
  3. valthukal tholar,
    Ungal muyartchi vetripera...
    Suma pora nayae yarum Kallavitta Adikamattanga. Thamilatchiyai kolla karanam irunthathal than Rajiv Gandhi veru vali endri kolla pattar engira Viduthalai Puligalado vathathai senthithu parka vendum

    ReplyDelete