பள்ளி படிக்கிற சமயத்துலயே ஊருபட்ட காதல் கதை, கல்லூரில கேக்கவாவேனும். என்ன அத்தனையும் சொல்லனும்ன்னு ஆரம்பிச்சா விடிஞ்சுரும். அதுவும் சரியா நான் கல்லூரிக்கு போற சமயத்துலதான் கைபேசி பிரபலம் அடைய துவங்குச்சு. வந்த புதுசுல எவனாவது ஒன்னு ரெண்டு பேர்தான் வச்சிருப்பான், அதுலயே எல்லாப் பயலும் பேசுவான். கைபேசி வர்றதுக்கு முன்னாடி, அதுவும் வேற வேற ஊர்கள்ல இருந்த காதலர்கள் என்ன செஞ்சாங்களோ தெரியல. ஆனா இப்பமட்டும் கைபேசிய வச்சுக்கிட்டு என்ன எதிர்கால வாழ்க்கையப்பத்தியா பேசுறாங்க, பேசுறது எல்லாம் ஒன்னே ஒன்னுதான்.
@ அப்பறம்
# அப்பறறம்ம்ம்ம்
@ நீதான் சொல்லணும்
# நீயே சொல்லு
@ சும்மா சொல்லு
# அப்பறம்
@ ம்ம்ம்ம்
# அப்பறம்ம்ம்ம்
@ சொல்லுலுலு…..
# அப்பறறம்ம்ம்ம்
@ நீதான் சொல்லணும்
# நீயே சொல்லு
@ சும்மா சொல்லு
# அப்பறம்
@ ம்ம்ம்ம்
# அப்பறம்ம்ம்ம்
@ சொல்லுலுலு…..
சரி நாம சங்கதிக்கு வருவோம், பசங்க காதல சொல்லுறது எப்பவுமே நகைச்சுவைதான் , அதுலயும் நம்ம 'தி.திமிங்கலம்' சொன்னவிதம் உச்ச கட்ட கூத்து. அடிச்சு பிடுச்சு ஒரு வாழ்த்து அட்டைய வாங்குனான், அத நேர்ல போய் குடுக்காம அந்த பொண்ணோட புத்தகத்துக்குள்ள வச்சுட்டான். மாட்டுனா அடி விழும்ன்னு, அதுல பேரையும் எழுதல. அடுத்த நாள் அந்த பொண்ணுகிட்ட போய் "அது என்னோடது"ன்னு இவன் ஒரு மாதிரி கண்ண உருட்டிக்கிட்டு சொல்ல, அந்த வாழ்த்து அட்டைய அவனோட கையில கொடுத்துட்டு அந்த பொண்ணு திரும்பி பாக்காம ஓடிருச்சு. அதுக்கு அப்பறமா நம்ம 'தி.தி' எந்த பொண்ணுகிட்டையும் சும்மா கூட பேசுறதில்ல.
ஒரு பொண்ணுகிட்ட காதல சொன்னதுக்காக (அதுவும் கண்ணியமான முறைல) ஒரு போக்கிரி மாதிரி சித்தரிக்கப் பட்டவன் நம்ம 'நீதியலங்காரம்'. இத்தனைக்கும் அவன் ஊருபட்ட காதலுக்கு, என்னோடது உட்பட நிறைய உதவுனவன். ஒரு நாள் வண்டில இவனோட ஆளு பின்னாடியே போய், அந்த பொண்ணோட வீட்ட கண்டுபுடிச்சதத் தவிர நான் அவனுக்கு எதுவும் செஞ்சது இல்ல. இதே மாதிரி நம்ம 'மஞ்சா மதுரை மன்னனோட' ஆளு வீட்ட கண்டுபுடிக்க அந்த பொண்ணு பின்னாடி போனப்ப, என்னோட ஆளு என்ன பார்த்து கடுப்பானது வேற சங்கதி. ஆனா நான் போய் வீட்ட கண்டுபிடிச்ச ரெண்டு காதலும் சேரல, என்ன பண்ண நம்ம ராசி அப்படி.
நம்ம தி.திமிங்கலத்துக்கு அப்படியே நேர் எதிரானவன் நம்ம 'நாய் சேகர்', காதலிக்கிற பொண்ணுகிட்ட மட்டும் இல்லாம எல்லா பொண்ணுங்ககிட்டையும் சரளமா கடல போடுவான். அப்பெல்லாம் என்னோட கைபேசி என்ன விட அவன் கையிலதான் அதிகமா இருக்கும். பொதுவா எனக்கு முக்கியமான பொழுதுபோக்கு என்னன்னா பசங்களோட மாமனாருகளுக்கு (காதலிக்கிற பொண்ணோட அப்பா) எதாவது பேரவச்சு கிண்டல் பண்றதுதான், அதுல நல்லா மாட்டுனது 'நாய் சேகரோட' மாமனாருதான். அதுலயும் நம்ம பயலோட மாமனார் வேற காவல்க்காரர், ஆளு சும்மா எம்.சி.ஆர். மாதிரி தக தகன்னு மின்னுவாருன்ன பாருங்களேன். காவல்க்கார மாமனார் கூட நம்ம நாய் சேகரும், அவன்கிட்ட கடல போட்ட பொண்ணுங்க கூட அவனோட ஆளும் போராடி கடைசியா வெற்றி அடைஞ்சு ஒன்னு சேர்த்தாங்க .
இது போக நம்ம பய ஒருத்தன் (அந்த நண்பனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இங்கே நான் பெயரை குறிப்பிடவில்லை) கல்லூரில ஒரே ஒரு வகுப்ப மட்டும் உசிரக்கொடுத்து கவனிச்சான், படிச்சான். வருகை பதிவேட்டுல வேற அவன் பேரு எப்பவும் இருக்கும். அவனுக்கு என்னமும் ஆயிடிச்சோன்னு எனக்கு ஒரே பயமா போச்சு, ஒருநாள் அவன அப்படியே அமுக்கி என்னதான்டா ஆச்சு உனக்குன்னு கேட்டேன். அதுக்கு அவன் நான் அந்த பாடம் சொல்லித்தர்றவங்கள காதலிக்கிறேன்னு ஒரே போடா போட்டான், இதுல ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா அவுங்க திருமணம் ஆகாதவங்க, என்ன இவன விட அவுங்களுக்கு நாலு வயசு அதிகம். சும்மாவே இங்க காதல் கிலு கிலுன்னு கை கூடும் இதுல வயசு வித்தியாசம் வேற, அவனும் தோல்வி பட்டியல்ல சேர்ந்துட்டான்.
நான் எழுதுனது எல்லாம் கொஞ்சம்தான், நிறைய நண்பர்களோட கதைய சில காரணங்களுக்காக நான் எழுதவே இல்ல. உதரணமா நம்ம 'ஆங்.அரச குமார்' கதையில அரசியல் கலந்திருக்கு, 'கழுத புலி' கதையில மத பிரச்சனை கலந்திருக்கு, இன்னும் சில நண்பர்கள் எளிதுல உணர்ச்சிவசப்பட கூடியவங்க அதனால அவுங்களோட கதைகள எழுதல. நமக்கு எதுக்கு வம்பு, இத எழுதுனதுக்கே எத்தன பேர் கடுப்பாகுறாங்கலோ யார் கண்டது. நம்ம பசங்களோட காதல் கதைகள்ல தொண்ணூறு விழுக்காடு தோல்விலதான் முடிஞ்சது. ஒன்னு இவனுங்க சரியா இருந்தா, பொண்ணுங்க சரியா இருக்காது. பொண்ணுங்க சரியா இருந்தா, இவனுங்க குட்டைய குழப்புவானுங்க. எப்பவாவது தெரியாத்தனமா ரெண்டு பேரும் சரியா இருந்துட்டா, இருக்கவே இருக்காங்க பெத்தவங்க கடமையா வந்து கட்டைய குடுக்க.

அது யாருப்பா பாடம் சொல்லி தந்தவங்கல காதலிச்சது? நம்ம குருநாதரா?
ReplyDeleteஅது யாருன்னு சொல்ல எனக்கு அதிகாரம் இல்ல, நண்பா
ReplyDeleteKadhal...
ReplyDeleteKadhal...
Kadhal...
Kadhal oru kalati potta seruppu ...
Size sariya iruntha yaar venalum maatikalam ...
Love Hurts a Lot???????????????
ReplyDeleteethila pilai irukirathu
ReplyDeleteIdhula Pilai irukkudha, Idhu sammandhamaa yaarkkavadhu Pillai irukkudhaa? :-)
ReplyDelete