எனக்கிட்ட ஒரு கெட்ட பழக்கங்க, நானா உக்காந்து
எழுதவே மாட்டேன். யாராவது என்னை இழுத்துவிடனும், முக்கால்வாசி நேரம் அவங்கள அறியமயே
இந்த உதவிய பலர் செய்றாங்க. இந்த தடவையும் அதே மாதிரிதான், ரொம்ப நாள் கழிச்சு,
கூட படிச்சா நண்பர பார்த்தேன். அவர்கிட்ட நம்ம வலைப்பூவ பத்தி பேசும் போது, அவர்
சொன்ன சில உற்சாக வார்த்தைகள் சிந்தனைய தூண்டிருச்சு. அட நம்ம எழுதுறத கூத்த
பத்தியே எழுதலாமேன்னு துவங்கிடேன். (அப்பறமா இந்த பதிவில் வரும் அனைத்தும் வெறும்
நகைச்சுவைக்காகத்தான், படிச்சிட்டு சிரிப்பு வரலைன்னா விட்ருங்க, அதிகமா
சிரமப்படாதிங்க.)
வாசிப்பு பழக்கம் துவங்குன சில நாள்லயே, எனக்கு
எழுதனும்ன்னு ஆசை வந்திருச்சு. ஆனா அதுக்கெல்லாம் வாய்ப்பு வகையே இல்லன்னு
நெனச்சேன். அப்புறமா வலைப்பூக்களப் பத்தி தெரிஞ்ச பிறகு ஒரு சின்ன ஆசை நம்மளும்
கட்டுரை எழுதலாமேன்னு. ஆனா மனசுல நிறைய பயம், நம்ம ஒழுங்கா எழுதனுமே, இன்னும் குறிப்பா
சொல்ல போனா பிழை இல்லாம எழுதனுமே (ஆனா இன்னைய வரைக்கும் பிழைகளோடத்தான் எழுதுறேன்),
எல்லாத்துக்கும் மேல படிச்சிட்டு எவனும் கிண்டல் பண்ணாம இருகனுமேன்னு.
அப்புறம் வழக்கம் போல நண்பர்கள் கொடுத்த
தைரியத்துல, உள்ளதாகுதுன்னு எழுத்த ஆரம்பிச்சுட்டேன் (நண்பர்கள் இல்லேன்னா என்பாடு
ரொம்பவே மோசம்தான்). எழுதுறது எல்லாம் சரிதான் ஆனா அத படிக்க ஆள் வேணுமே, அங்க
தாங்க பிரச்சனையே ஆரம்பம். ஒவ்வொரு தடவையும் எழுதி முடிச்சிட்டு அத எல்லாரையும்
படிக்கவைக்கிறது இருக்கே, பெரும் பாடுங்க.
முதல் பதிவ எழுதி முடிச்சதும், நிறைய பேருக்கு
அத அனுப்பவே இல்ல, நெருக்கமான பசங்களுக்கு மட்டும்தான் அனுப்புனேன் (எல்லாம் ஒரு
தயக்கம்தான்). பலரும் நல்ல இருக்குன்னு பின்னூட்டங்கள் போடவும், ஒரு தைரியம் வந்து
தொடர்ந்து எழுதினேன். அத எல்லாருக்கும் அனுப்பவும் செஞ்சேன்.
ஆனா பாருங்க அடுத்தாப்புல எழுதுன எதையும், சொல்லி
வச்ச மாதிரி பத்து பேர தவிர யாரும் படிக்கல. நானும் பசங்களுக்கு கைபேசில
குப்பிட்டு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கடான்னு பல தடவை சொல்லி
பார்ப்பேன், எவ்வளோ முக்குனாலும் அந்த பத்து பேர தாண்டாது.
நம்ம ‘நாய் சேகர்’ பயல ஒரே ஒரு பதிவ படிக்க
வைக்க எனக்கு இருபது நாள் ஆச்சு. அவனாவது பரவாயில்ல, ஒன்னயாவது படிச்சான். இந்த
‘குடந்தை குண்டன்’கிட்ட படிடான்னு சொன்னா அவன் சாதாரணமா “என்ன மாமா இவ்வளோ பெருசா
இருக்கு”ன்னான், (இத்தனைக்கும் அதுதான் நான் எழுதுனதுலையே சின்ன பதிவு) அதுக்குமேல
நான் அவன படிக்க சொல்லுறதே இல்ல.
என்னதான் படிச்சதே இல்லைனாலும் அவனும் என்னோட
வலைப்பூவ தொடருவோர் பட்டியல்ல இருக்கான்!. உண்மைய சொல்லப்போனா என்னொட வலைப்பூவ
தொடருவோர் பட்டியல்ல இருக்க பாதிபேர் அப்படித்தான், படிச்சதே இல்ல. இதுல வேற நான்
பயலுக மூலமா நிறைய ‘வாசகர்’கள அடையாலாம்ன்னு திட்டம் போட்டிருந்தேன், எங்க? இவனுக படிக்கிறதே
பெரும் பாடா இருக்கு.
எப்படியும் படிக்கிறவங்களோட எண்ணிக்கைய
கூட்டனும்னு பயங்கரம யோசிச்சேன். அப்பதான் ஒருநாள் நம்ம ‘குதிரை வண்டன்’கிட்ட
பேசிகிட்டு இருக்கும் போது ஒரு அற்புதமான யோசனை வந்துச்சு. அட சொல்ல மறந்துட்டேன்
பாருங்க, நம்ம ‘குண்டல வண்டன்’ தன்னோட குண்டலத்த தொலைச்சிட்ட படியாலும், இப்ப
புதுசா குதிரை வால் வச்சிருக்கும் படியாலும், இனிமேல் அவர் ‘குதிரை வண்டன்’.
சரி நம்ம சங்கதிக்கு வருவோம், அந்த யோசனை
என்னன்னா “எந்த ஒரு சமாச்சாரத்தையும் வேகமா பரவவைக்க பொண்ணுகளால மட்டும்தான்
முடியும்”. சரின்னு ‘சிறுதீனி செங்குருவி’கிட்ட நான் எழுதுறத பத்தி
சொல்லிவச்சுட்டு வந்தேன். யோசனை ஓரளவுக்கு நல்லாவே வேலை செஞ்சுது, இதன்மூலாமா அறிமுகமான
‘புதுக்குடி பொன்னக்கா’ நல்ல வாசகிய மட்டும் இல்லாம, ஒரு நல்ல சகோதரியாவும்
இருகாங்க.
இப்படியா எந்த ஒரு யோசனையும் ‘பெருசா’ வேலை
செய்யாததுனால, கடைசியா ஒரு முடிவுக்கு வந்துட்டேன். என்னதான் சில சமயங்கள்ல பதிவு கொஞ்சம்
முன்ன பின்ன இருந்தாலும், நெருக்கமான நண்பர்கள்ல இருந்து முகம் தெரியாத சில
நண்பர்கள் வரைக்கும், எனக்கு இங்க பல பேர் அதரவு கொடுக்குரீங்க. அப்படியே இந்த
வலைப்பூவ இன்னும் கொஞ்சம் பேர படிக்கவைக்க நீங்களே நல்லதா ஒரு யோசனையும்
கொடுங்களேன்.
முடிக்கிறதுக்கு முன்னாடி என்னை எழுத்த தூண்டிய
அந்த உற்சாக வார்த்தைகள சொல்லன்னும்ல. நானும் வலைப்பூல எழுதுறேன்னு சொன்னோன்ன,
அந்த நண்பர் சொன்னது ‘ஆமாம் ஆமாம் இப்பெல்லாம் வலைப்பூல உன்ன மாதிரி எவனெவனோ
எழுதுறன்ல!’.
தன்னோட குண்டலத்த தொலைச்சிட்ட படியாலும், இப்ப புதுசா குதிரை வால் வச்சிருக்கும் படியாலும், இனிமேல் அவர் ‘குதிரை வண்டன்
ReplyDelete